பால் குடிப்பதை தவிர்த்தால் உங்க உடலில் இந்த சத்து இல்லாமல் போக வாய்ப்புண்டு
Milk Lovers : மாட்டின் பால் கொண்டு செய்யப்படும் உணவுகளை பிடிக்காதவர்கள் என எவரும் இலர். ஸ்ரீவில்லிபுதூர் பால்கோவா முதல் பாலை கொண்டு செய்யப்படும் உணவினை பலரும் விரும்பி உண்ணுவர். எனினும் சிலருக்கு பால் ஒவ்வாமை எனும் காரணம் கொண்டு பால் கொண்டு செய்யப்படும் உணவுகளை மற்றும் பாலை பருக முடியாத துருதஷ்ட நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களுக்கான மாற்று கால்சியம் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமானது கால்சியம். கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது. கால்சியம் சத்து குறைப்பாட்டால் உடலின் ஒட்டுமொத்த நிலைத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 எம்ஜி கால்ஷியமாவது சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். கால்சியம் சத்து பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் நிரம்பியுள்ளது. பாலில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட புரதம் ஒரு சிலருக்கு உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் பால் பொருட்களை சாப்பிட முடியாதவர்களுக்கு கால்சியம் சத்து எப்படி கிடைக்கும்?
விதைகள் : பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 எம்ஜி கால்சியம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டோஃபு : பனீருக்கு மாற்றாக சோயாவில் இருந்து தயாரிகப்படும் டோஃபுவைப் பயன்படுத்தலாம். இதில் கால்சியம் சத்து மட்டுமல்ல, அதிக புரதமும் உள்ளது மற்றும் குறைவான கலோரி கொண்ட உணவாகும். பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு டோஃபு மிகச்சிறந்த உணவாகும்.
சோயா பால் : பால் பொருட்கள் சாப்பிட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, சோயா பால் நல்ல மாற்றாக உள்ளது. பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம், சோயா பாலிலும் இருக்கறது.
Source:https://go.ly/prR4y
கருத்துகள்
கருத்துரையிடுக