Easy Money via net.....

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


மின்னஞ்சல்அச்சிடுகPDF
make-money-onlineவீட்டில் இருந்தபடியே இணையத்தளத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 'ஐந்தாயிரம் கட்டினால் மாதம் ஐம்பதாயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்ற உள்ளூர் விளம்பரங்கள் தொடங்கி, டாலர்களில் பணத்தை இணைத்தளத்தில் செலுத்தச் சொல்லும் பன்னாட்டு விளம்பரம் வரை ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்களை எங்கெங்கும் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே இணைத்தளத்தின் மூலம் சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில், எப்படி? எங்கிருந்து தொடங்குவது என்பதில்தான் பலருக்கும் குழப்பம். இந்த விஷயத்தில் பொதுவாக இரண்டு விதமான மாயைகள் நிலவுகின்றன. ஒன்று 'அடிப்படைக் கணிணி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு நம்மாலெல்லாம் இணைத்தளத்தில் சம்பாதிக்கவே இயலாது' என்று தீர்மானிப்பது. இரண்டு 'விளம்பரங்களில் வருவது போல் பலருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விளம்பரங்களைச் சொடுக்குவது போன்றவை மூலமாகவே சுலபமாக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நம்புவது'. இவை இரண்டுமே இரண்டு துருவத்தைச் சேர்ந்தவை.

இணையத்தின் மூலம் கண்டிப்பாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை. இதற்கு கணிணியில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்ற தேவையுமில்லை. அதே சமயம் அது பணங்காய்ச்சி மரத்தினை உலுக்கிப் பணத்தை எடுத்துவருவது போல் மிகச் சுலபம் என விளம்பரங்கள் சொல்வதும் வடிகட்டின பொய்தான்.

முதலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். Easy Money என்று எதுவும் கிடையாது. உழைப்பில்லாமல் சம்பாதிப்பது என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும். நேர்மையாக, நாணயமாக ஆனால் உழைப்பின்றிப் பணத்தைச் சம்பாதிப்பது என்பது இயலாது. அதுவும், இணைத்தளத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டுமெனில் விடாமுயற்சியும் பொறுமையும் அவசியம். நீங்கள் கணிணித் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தால், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் செலவிட்டால் ஒருவேளை போதுமானதாக இருக்கக் கூடும். சாதாரணமான 'கணக்கியல்', 'Data Entry' பணிகள், வலைத்தளபராமரிப்புப் பணிகள் இவற்றைச் செய்பவரானால், தொடர்ச்சியாகப் பணி செய்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.

ஆயினும், நீங்கள் உண்மையான ஆர்வத்தோடும், அக்கறையோடும் உழைத்தால், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில்கூட சம்பாதிக்கலாம். சொல்லப்போனால், மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் உங்கள் நண்பரை விடக்கூட அதிகமாகவே உங்களால் சம்பாதிக்க முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

இணையத்தில் சம்பாதிக்க என்னென்ன தேவை? ஏதாவது நிறுவனத்திற்குப் பணம் கட்டி ஆலோசனை பெறவேண்டுமா? கண்டிப்பாகத் தேவையில்லை. இவ்வளவு பணம் அனுப்புங்கள்... நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நல்ல,விரைவாகப்பணியாற்றும் ஒரு கணிப்பொறி, இணைத்தள இணைப்பு, அடிப்படைக்கணிணி அறிவு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பொறுமை, நிறைய அக்கறை, கடின உழைப்பு இவைதான். இவையெல்லாம் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது நாம் மேற்கொண்டு செல்லலாம்.

இணைத்தளத்தின் மூலமாகச் சம்பாதிப்பதில் என்னென்ன வசதிகள்?

ஒன்று: சுதந்திரம் - நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி. விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்யலாம். போக்குவரத்து அலைச்சல் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும் தடைப்படாமல் வேலை செய்யலாம்.

இரண்டு : வருமானம் - இவ்வளவுதான் சம்பளம், இவ்வளவு நேரம்தான் வேலை என்பது இல்லை. உங்கள் சம்பாத்தியத்தை நீங்களே தீர்மானிக்க முடியும். உடல் நலமும் உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் உங்கள் வருமானத்தில் எல்லையும் விரிந்துகொண்டே போகும். உங்கள் திறமை, ஒதுக்கும் நேரம், உழைப்பு, கற்றுக்கொள்ளும் வேகம் இவற்றைப் பொறுத்து உங்கள் வருமானமும் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.

மூன்று: அபாயமின்மை: சொந்தமாக நீங்கள் ஒரு தொழில் தொடங்கினால், அதில் எத்தனையோ அபாயங்கள் உண்டு. சிக்கல்களும் உண்டு. நீங்கள் முதல் போடவேண்டும். தொழில் தொடங்க அனுமதி வாங்கவேண்டும். சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்று பல உண்டு. நீங்களே எல்லாவற்றையும் செய்ய இயலாது என்பதால் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நட்டமேற்பட்டாலோ, கடனாளியாகிவிட நேரும் அபாயம் உண்டு. இணைத்தளம் மூலம் தொழிலில் இறங்குகையில் குறைவான பணம் போதுமானது.

நான்கு: வளரும் தேவை: இணைத்தள சந்தை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பலதரப்பட்ட பொருட்களும் இணைத்தளத்தில் விற்பனை ஆகின்றன. மக்கள் நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து வாங்குவதை விட, இணைத்தளத்தின் மூலம் வாங்குவது வசதியானது, எளிமையானது என்று கருதத் தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுப்பதை விட, சுயேச்சையாக இணைத்தளத்தில் பணிபுரிபவர்களிடம் வேலையைக்கொடுப்பது லாபகரமானது என்று எண்ணுகிறார்கள். இதனால், சந்தைப்படுத்துதல், கணிணிப்பணிகளுக்கான வேலை வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

ஐந்து: கற்றலில் எளிமை: நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டுமெனில் படிப்புக்கான சான்றிதழ்கள் வேண்டும். ஒரு கணக்கியல் துறையில் பணி வேண்டுமென்றால் அதற்குப் படித்திருக்கவேண்டும். ஆனால், இணைத்தளத்தில் கற்றுக்கொள்வதும் எளிது, உங்களுக்குப் பணி கொடுப்பவர்களும் உங்கள் வேலைத்திறனைப் பார்ப்பார்களே தவிர தகுதிச் சான்றிதழ் கேட்க மாட்டார்கள். சராசரித் திறனும், கற்பதில் விருப்பமும் உள்ள என் நண்பர், (இணைத்தளத்தினை மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தவர்) ஓரிரு வருடங்களாக வலைப்பணி புரிகிறார். மென்பொருள் நுட்பம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று இணைத்தள நிர்மாணங்கள், பராமரிப்பு இவற்றின் மூலமாக மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இது மிகைப்படுத்தப் பட்டதில்லை. உண்மையான உண்மை.

ஆறு: அதிக வேலை வாய்ப்பு: நீங்கள் விற்பனையாளராக இருந்தால், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருளை விற்பனை செய்யலாம்.பணி புரிபவராக இருந்தால், எந்த நாட்டில் இருப்பவருக்காகவும் பணி புரியலாம். உங்கள் வட்டம் விரிவடைவதால் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

ஏழு: ஒரே விதமான வேலையை சலிப்படையும் வரை திரும்பத்திரும்பச் செய்யவேண்டுவதில்லை. அதே போல், பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி முறையைப் பயன்படுத்தவேண்டியதும் இல்லை. இணையத்தில் நேர்மையாகப் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. (தொடரும் கட்டுரைகளில் நாம் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகக் காணலாம்). இதனால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன.



PDF
google-adsense
இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை. இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.முதலில் நாம் பார்க்கப்போவது 'Google Adsense'. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்? உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை. உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.


இணைத்தளத்தில் சம்பாதிக்கும் வழிகள் பலவற்றைப்பற்றியும், இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.
http://eelanation.com/ariviyal-pakuthi/41-kanani-kalvi/486-how-to-earn-online.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்