பென்டிரைவில் ரீசைக்கிள் பின்

பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க வேண்டுமா? இதோ!


pen-drive-kingston-datatravelerகணிணி மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்கள் ஏ தாவது ஒரு பைலினை தவறுதலாக டெலிட் செய்தால் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் பென்டிரைவ் மற்றும் மற்ற டேட்டா கார்டிலிருந்து ஒரு பைலினை டெலிட் செய்தால் அதனை மீண்டும் கொண்டுவருவது சிரமம்.ஞாபக மறதி காரர்கள் இவ்வாறு பைலினை டெலிட் செய்து பின்னர் அவதிக்குள்ளவர்கள்.  இவ்வாறு இவர்களின் சிரமம் நீக்குவதற்காக இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 650 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து உங்களுடைய பென் டிரைவ் மற்றும் ரீமுவபிள் டிரைவ்களில் பொருத்திக்கொள்ளவும். பின்னர் நீங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம்.
ஏதாவது பைலினை டெலிட் செய்கையில் உங்களுக்கு கீழ்கணட விண்டா ஓப்பன் ஆகும்.
recycle bin warning message பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க வேண்டுமா?
recycle bin custom option பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க வேண்டுமா?
இதில் மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் Erase it  Cancel.Dump into iBin என கொடுத்துள்ளார்கள்.உங்களுக்கு பைலானது தேவையே இல்லை என்றால் இதில் உள்ள Erase it கிளிக் செய்திடவும். உங்களுடைய பைலானது பென்டிரைவிலிருந்து காணாமல் சென்றுவிடும். இதில் உள்ள Dump into iBin கிளிக் செய்தால் நீங்கள் டெலிட் செய்த பைலானது இதில் உள்ள iBin ல் இருக்கும்.
recycle bin custom window பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க வேண்டுமா?
அங்கிருந்து நீங்கள் தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் மெமரி கார்டில் இதனை பயன்படுத்தலாம். மறதி அதிகம் உள்ளளவர்களுக்கு அவசரத்திற்கு இந்த சாப்ட்வேர்பயன்படும்.
Ref: http://www.puradsifm.com/news/it-news/pendrive/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்