பரீட்சைக்குத்தயார் செய்தல் எப்படி?
மாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தல் என்பது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறையாகும். இன்று பலவிதமான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பொருத்தமான பரீட்சை வழிகாட்டல் முறையாக PQRST முறை காணப்படுகின்றது.
Preview - மதிப்பீடு செய்தல்
Question - கேள்வி
கேட்டல்
Read - வாசித்தல்
Summary - சுருக்கமளித்தல்
Test - பரீட்சித்தல்
இவைகளினூடாக மாணவர்களின் கற்றல் நுட்பத்தினை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை வளர்த்; துக் கொள்வதற்கு சில நுட்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
• நினைவுபடுத்தல்
• கவனயீர்ப்பு
• ஒழுங்கமைப்பு
• சிந்திக்கும் ஆற்றல்
• ஈடுபாடு
• விளங்கிக்
கற்றல்
• சிறு சிறு பகுதிகளாகக் கற்றல
மேலும் உளவியல் அறிஞர்களான சிம்சன், நெஸ்ற் ஆகியோரின் ஆய்வின் பிரகாரம் பின்வருவன கற்றல் நுட்பங்களாக முன்வைக் கப்படுகின்றன:
• சுருக்கக்
குறிப்புக்களை எழுதுதல்
• கற்கும்
பாடத்தின் பிரதான கருத்துக்களை பிரித்தெடுத்தல்
• சில தரவுகளை அட்டவணைப்படுத்தல்
• முக்கியமான சொற்பதங்களை அடிக்கோடிடல் அல்லது Highlight பண்ணுதல்
• பொருத்தமான பாடப்பகுதிகளைத் தனியாகவும் குழுவாகவும் கற்றல்
கற்றல் என்பது ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியத்துவமிக்க ஒரு செயல்முறையாகும், ஆனால் பல மாணவர் கள் கற்கும் விடயங்களை எவ்வாறு தன்னுள் வைத்துக் கொள்ள முடியும் என்பதனை அறிந்து கொள்வதில்லை. மேலும் கற்கின்ற விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ள கையாளும் வழிமுறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• ஒழங்குபடுத்திக் கற்றல்
• முன்னர்
படித்தவற்றை பின்னர் படித்ததுடன் ஒப்பீடு செய்தல்
• உதாரணங்களைச் சிந்தித்தல்
• தனக்கு
கேட்கும் வகையில் வாசித்தல்
• நண்பர்களுடன் படித்ததைப் பகிர்தல்
• இடைவெளி
விட்டுக் கற்றல்
• திரும்பத்
திரும்பக் கற்றல்
மாணவர்கள் பரீட்சைக் காலங்களில் மிக முக்கியமாக தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நான்கு உண்டு, அவையாவன:
• சோம்பல் - Lazy
• தூக்கம் - Sleep
• சினிமா - Cinema
• இசை - Music
மாணவர்கள் பரீட்சைக் காலங்களில் மேற்குறிப்பிட்ட நான்கு விடயங்களில் மிக முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால், இவ்விடயத்தில்தான் மாணவர்கள் பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே, பெற்றோரும் ஆசிரியர்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தியாக வேண்டும். இவ்விடயங்கள் மாணவர்களின் நினைவாற்றலை குறைக்கின்றன. இதனால் பரீட்சையில் அவர்களால் படித்தவற்றை நினைவில் கொண்டுவந்து சிறந்த பெறுபேற்றினை பெறமுடிவதில்லை. மாணவர்களின் கற்றலைப் பாதிக்கின்ற ஏனைய காரணிகள்:
• நுண்மதி
(Intelligent)
• உடலியற்
பண்புகள்
• தனியாள்
வேறுபாடுகள்
• கற்றல்
வேகம்
• நுழைவுத்
தேர்ச்சிகள்
• எதிர்பார்ப்பு மட்டம்
• கற்கும்
ஆற்றல்
• சமூக, பொருளாதாரப் பின்னணி
பாடசாலைகளில் இன்று பயன்படுத்தப்படும் தனிக் கற்பித்தல் முறைகள்
(Individual Methods), விளையாட்டு முறைகள் (Play way
Methods), செயல்முறைகள் (Activity Methods), காட்சிப் பொருள்களைப் பயன்படுத்திக் கற்பித்தல் போன்றவையாவும் உளவியலின் அடிப் படையில் எழுந்த முறைகளேயாகும். கல்வியென்பது ஒரு பாடப்பொரு ளைப் போதித்தல் மட்டுமன்று. கல்வியின் குறிக்கோள் ஒரு மாணவனின் முழு வளர்ச்சியேயாகும். பாடசாலை என்பது சமுதாயத்தின் ஒரு பகுதியாகும். சமுதாயத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்;கள் ஆகியோரது முழு ஒத்துழைப்பினையும் பெற்று மாணவர்களின் கல்வி முன்னேற் றத்துக்காக பாடசாலை சிறப்பாக செயலாற்ற 'கல்வி உளவியல்' ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உதவி புரிகின்றது.
பாடசாலை முன் கல்வி விருத்திச் செயற்பாடுகள் முறைசார்ந்த கற்றலுக்கு துணையாகின்றனவா?
தற்காலக் கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்தவிடயமே. அந்தவகையில் முறைசார்ந்த கற்றல் செயற்பாடுகளை பாடசாலைக் கல்வியின் ஊடாக மாணவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். எமது நாட்டில் நடைமுறையில் உள்ள பாடசாலைக்கல்வியானது பல பிரிவுகளில் காணப்படுகின்றது. தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான வகுப்புக்களை கொண்டதாக ஆரம்பக்கல்வி அமைந்துள்ளது. இவ்வாறான வகுப்பறைகள் யாவும் மூடிய வகுப்பறைகளாகவும் மாணவரின் சுதந்திரமான செயற்பாட்டிற்குப் போதிய இடவசதி உள்ளனவாகவும் காணப்படுதல் வேண்டும். இந்த அடிப்படையில் இன்று எத்தனை பாடசாலைகள் காணப்படுகின்றன என்பது வேறுவிடயம். இருப்பினும் அதிகமான ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் இவ்வாறே காணப்பட்டாலும் கிராமப்புறங்களிலுள்ள அதிலும், தூரப்பிரதேசங்களில் காணப்படும் பல பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை, உரிய முறையில் ஆரம்பகல்விச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதில் நாட்டமுள்ள ஆசிரியர்களும் இங்கு குறைவாகவே காணப்படுகின்றனர் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டியும் உள்ளது.
இந்நிலையில், இன்று பாடசாலைக்கு வருகின்ற அநேகமான மாணவர்கள் முன்பள்ளிகளில் பயிற்சி பெற்றே வருகின்றனர். இருந்தபோதிலும் பாடசாலைக்குள் ஆரம்பக்கல்வியில் இவர்களது பங்களிப்பு, கல்விமீதான ஆர்வமற்ற தன்மைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான மாணவர்களை கையாள்வதில் பாடசாலையின் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பலத்த சவாலகவும் அமைகின்றன. வருடந்தோறும் எதிர்பார்க்கின்ற தேர்ச்சியினை அடைந்து கொள்வதில் இடர்படுகின்ற மாணவர் கூட்டமொன்று வகுப்பறைகளில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்த இடர்பாடுகள் கற்றலில் தொய்வு நிலைமையை ஏற்படுத்தி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் குறைவான புள்ளிகளை பெறுவதும், க.பொ.த.சாதரண தரத்தில் தனது தாய்மொழிப் பாடத்தில்கூட குறைவான அடைவினைக் காண்பிக்கும் போக்குகள் இப்பாடசாலை மாணவர்களிடம் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் நாட்டுக்கும், கல்வியின் நோக்குகளிலும் பாரிய தாக்கத்தின ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.
இதற்குரிய காரணங்கள் பலகூறப்படுகின்றன. குறிப்பாக அவர்களின் குடும்பப் பின்னணி காரணமாக அமையலாம் என்பதுதான் அநேகரது குற்றச்சாட்டாகும். எனினும், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் விடா முயற்சியினாலும், அயராத உழைப்பினாலும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெறுவதில் அதிக கவனமெடுக்கின்றனர். அதேபோன்று க.பொ.த.சாதாரனதர பரீட்சையிலும் கணிசமான அளவு மாணவர்கள் சித்தியடைந்தே வருகின்றனர். இருந்தாலும் குறிப்பிடக்கூடிய, ஒரு தொகை மாணவர்கள் எவ்விதமான பேறுபேறுமின்றி பாடசாலைக் கல்விக்கு வேட்டுவைத்தும் விடுகின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் தரம் ஒன்றில் சேர்கின்றபோது முன்பள்ளி நிலையங்களில் பயிற்சிபெறாமல் வந்தவர்களாகவே அதிகமானோர் காணப்படுகின்றனர். அத்தோடு சில முன்பள்ளிவிருத்தி நிலையங்களில் மாணவர்களை சரியான முறையில் கையாளாமல் வீணே காலத்தினை நகர்த்;தியதன் காணரமாகவும் இந்தநிலை ஏற்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் காணப்படுகின்றது.
இதனால்தான் புதிய கல்விச்சிந்தனைகள் மேலோங்கிய இன்றைய காலகட்டத்தில் இதற்கான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தரமான பாடசாலையின் ஊடாக தரமான கல்வியினைப் பெற்று, தரமான கல்வி சமூகத்தைத் தோற்றுவிப்பதே இன்று கல்வியின் பொதுவான இலக்காகும். இந்த அடிப்படையில் பாடசாலைக்கு முன்னுள்ள பருவத்தில் மாணவர்கள் சரியான முறையில், சரியான வழிகாட்டலில் பயிற்றுவிக்கப்படுவார்களாக இருந்தால், அந்த மாணவர்கள் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்குவார்கள். முதன்மைநிலை ஒன்றின் செயற்பாடுகள் ஊடாக தரமான ஆரம்பக்கல்விக்கான அத்திவாரத்தையும் இடக்கூடியதாக இருக்கும்.
இன்று சந்துபொந்தெங்கும் முன்பள்ளி நிலையங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதில் எந்த நிலையங்கள் சரியான முறையில் மாணவர்களைக் கையாள்கின்றார்கள் என்பதில்தான் பிரச்சினைகள் உண்டு. பிள்ளைகளைக் கையாள்கின்ற பயிற்சிகளோ, மாணவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய இடவசதிகளோ இன்றிக் காணப்படுகின்ற முன்பள்ளிவிருத்தி நிலையங்களை இனங்கண்டு அந்த சமூகத்தின் பங்களிப்புடன், மாகாணத்தினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள அதிகாரிகளினால் புனர்நிர்மாணிக்க வேண்டிய அவசியமும் இன்று உணரப்பட்டுள்ளன. அந்தவகையில் இன்று பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிள்ளை நேய அணுகுமுறைகள் தொடர்பான விடயங்களையும் உட்புகுத்தி பிள்ளைநேய முன் ஆரம்பப்பாடசாலைகளாக உருவாக்கம் செய்வதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பானதாகும்.
'ஆச்சரியமான நாட்டை உருவாக்கும் நோக்கில், சுதந்திரம் கொண்ட, சுய ஆளுமை கொண்ட சிறுவர் பரம்பரையை நாட்டுக்கு அளிப்பதற்காக வழிகாட்டலைச் செய்தல்' என்கிற நோக்கையும், 'கல்வியில் முதல் அடித்தளமான முன் பிள்ளைப் பருவ கல்வி மற்றும் ஆரம்பக் கல்வியை, புதிய பயிற்சிகளால் நல்ல பயனுள்ள, உறுதியான மற்றும் ஆக்கத்திறன் கொண்டதாக பிள்ளைகளுக்கு வழங்குவதன் ஊடாக முழுமையான உடல் மற்றும் உள நலம் பெற்ற, தேசத்தின் சிறந்த பிள்ளையை தாய்நாட்டுக் அளிப்பதன் பொருட்டு ஆசிரியர்கள், பெற்றோர், அதிகாரிகள் மற்றும் மாணவர்களுக்கு உரிய அறிவூட்டம் செய்தல்' என்கிற பணிக்கூற்றின் அடிப்படையில் முன் ஆரம்பப்பாடசாலைகள் அமையவேண்டும் என்றும், 'சிறந்த ஆளுமை நிறைந்த, ஆக்கத் திறன் கொண்ட, முழுமையான உடல் மற்றும் உள நலம் உடைய இலங்கைப் பிள்ளையை தாய் நாட்டுக்கு அளித்தல்' என்கிற அடிப்படை நோக்கத்தையும் கொண்டுள்ளதாக காணப்பட வேண்டும் இன்றைய முன் ஆரம்பப் பாடசாலைகள்.
இவ்வாறாக காணப்படுகின்ற முன்பள்ளிகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற கல்வி நடவடிக்கைகள் நான்கு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் காணப்படுதல் அவசியமாகும். அதாவது,
குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
விரும்பத்தகுந்த மனோபாவங்களை வளர்த்தல்
நல்ல நடத்தைகளையும், தேகாரோக்கியத்தையும் வளர்த்தல்
குழந்தையை அடுத்த நிலைக்குத் தயார் செய்தல்
போன்றவைகளில் கவனம் செலுத்தப்படுகின்றபோது அந்த குழந்தைகள் முறைசார்ந்த கற்றலுக்கு தகுந்தவர்களாக பாடசாலைக்குள் செல்கின்றனர். எனவேதான் இதுதொடர்பில் முன்பள்ளி நிலைய ஆசிரியர்கள் கூடிய விளக்கங்களையும், பயிற்சிகளையும் பெற்று சிறப்பான தயார்படுத்தலை மேற்கொள்தல் சிறப்பானதாக அமையும். அந்தவகையில், குழந்தைக்கு கல்வி புகட்டுமுன் அதன் தேவைகள், இயல்புகள் (Child Nature) பற்றிய அறிவினை ஆசிரியர் பெற்றிருப்பதுடன், சுதந்திர அடிப்படையிலான கல்வியை இயற்கையாகவே அவர்கள் பெறவேண்டும். அத்துடன், அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை புலக்காட்சி (Sense Training) எனும் கருத்துக்கமைய உண்மைப் பொருட்களுடன் குழந்தை நேரடியாகத் தனது புலன்களின் வழியாக தொடர்பு கொண்டு பல கல்வி அனுபவங்களைப் பெறுவதற்கு வழிகாண்பிப்பதுடன், தானே முயன்று கற்றல் எனும் கோட்பாட்டுக்கமைய பிறரது குறுக்கீடுகளின்றி தானே செயற்படுவதற்கும், செய்து கற்றல் (Learning by doing) எனும் கருத்துக்கமைய கற்றல் கற்பித்தல் அனுபவங்கள் யாவும் சொற்களின் வழியேயன்றி செயல்களின் வழியேதான் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், குழந்தைகளின் இயல்பூக்கங்களை தண்டனை வழியாக நசுக்க முற்படக்கூடாது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுக்கள் தசைகளின் இசைவுக்கு பெரிதும் உதவுவனாகவும் அமைதல் வேண்டும். ஏனெனில், குடும்பத்துடன் வாழ்ந்த குழந்தை முதலாவது சமுகக் கட்டமைப்புக்குள் வருகின்றபோது அங்கே சமூகமயமாக்கபடுகின்றது. சிறுவர் கழகம், தனக்குரிய கடமை, பொறுப்பு, தான் பெறக்கூடிய சலுகைகள் போன்றவற்றை அறிய முன்பள்ளிகள் உதவுகின்றன. இந்நிலையங்களில் காணப்படும் குழந்தைகள் தமது முதிர்ச்சி நிலைக்கேற்ப தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த பழக்கப்படுவதுடன், கல்விமுறைகள் இரசனைமிக்க மனப்பாங்கை தூண்டுவனாவாகவும், புத்திக்கூர்மை, சுறுசுறுப்பு போன்ற வளர்ச்சிக்கான ஆற்றல்கள் வளர்க்கப்படுதல் வேண்டும். ஆராய்வூக்கத்திற்கும், புதியனவற்றைப் படைக்கும் ஆற்றலின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதுடன், தமது கலைகள், பண்பாடுகள் மூலமாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, மொழி மூலமாக சரியாக, தெளிவாக வெளியிடும் ஆற்றல் போன்றவற்றினையும் இங்கு வழங்குதல் வேண்டும்.
எனவேதான் சமூக விழுமியங்கள் பற்றிய அடிப்படையறிவு, மனப்பக்குவம், சிந்தனைக்கிளறல் போன்றன ஊடாக சிறந்ததொரு வீடாக முன்பள்ளிகள் அமைதல் அவசியமாகும். அத்துடன், சிறந்த பாதுகாப்பு, துன்ப உணர்வற்ற நிலை, சிறந்த சுதந்திர உணர்வுகளும் அங்கு வழங்கப்படுதல் வேண்டும். பிள்ளைகளின் உளவளர்ச்சியினைக் கருத்திக் கொண்டு ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு அதிக விளையாட்டும், அதில் ஆர்வமும் ஏற்பட்டு Kindergarten, Montessori போன்ற விளையாட்டு முறைகளை கற்பதற்கும் ஆசிரியர் வழிகாட்டுதல் சிறப்பானதாகும்.
முன்பள்ளிப் பாடசாலைப் பருவத்தினர் எதனையும் தெரிந்து கொள்ள முற்படுவர். அதேவேளை எதனையும் உற்று நோக்கும் திறனைப் பெறுவதுடன், காண்பவற்றை ஆராயவும், கேள்விகள் கேட்கவும் முனைகின்றனர். இது அவர்களது அறிவுவளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மனப்பான்மைக்கும் பெரிதும் உதவுகின்றது. கோபம், பிடிவாதம் போன்றவற்றால் சாதிக்கலாம் எனக் குழந்தைகள் செயற்பட முற்படுவார்;கள். ஆதலால் செயன்முறைகளை முன்பள்ளி ஆசிரியர்கள் நன்கு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் வேண்டும். பொதுவாக, குழந்தைகளின் உடல், உள, மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சிகளில் விளையாட்டுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதற்காகவே குழந்தைகளின் விளையாட்டுக்களில் விரிவான கவனம் செலுத்தப்படுகின்றது. எனவேதான், முன்பள்ளி கல்வி நிலையங்களில் சிறந்த செயற்பாடுகளுக்கும், கல்வி முறைகளுக்கும் விளையாட்டு சிறந்த கற்பித்தல் முறையாக முன்மொழியப்பட்டுள்ளது. விளையாட்டு குழந்தைகளிடம் இயற்கையாகவே காணப்படும். இதனை சரியாக பயன்படுத்துவது ஆசிரியரின் பொறுப்பாகும்.
எனவேதான் ஆரம்பக் கல்வி என்பது ஐந்து வயதினைப் பூர்த்திசெய்து முறையான கற்றலை தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான கற்றலை மேற்கொள்கின்ற பாடசாலைக் கல்வியாகும் இத்தகைய ஆரம்பக் கல்வி சிறப்பானதாக அமைகின்றபோது, அதுவே உயர் கல்விக்கும், சிறப்பான வாழக்கைக்கும் அந்தப் பிள்ளையை உயர்த்திச் செல்கின்றது. முன்பள்ளி என்பது மூன்று வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் கூடுகின்ற இடமாகும். இதுவோர் முறைசாரா நிலையமாகும். ஆதலால்தான் இப்படசாலைகள் இயற்iயின் கூடமாக, அழகிய மாடமாக, குழவிப் பூங்காவாக அமைக்கப்படல் வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
பாடசாலைக் கல்விக்கு அடித்தளமாக அமைகின்ற முன் ஆரம்பப்பாடசாலைகள் பிள்ளைநேயமிக்கதாக காணப்படுவதற்குரிய அடிப்படை அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு உட்படுதல், பால் சமத்துவம், பிள்ளைகளின் அறிவு, திறன் ஆகியவற்றின் தேவைக்கு உரிய தரமான கற்றல் பேறுபேறுகளை ஊக்குவித்தல், பிள்ளைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மாணவர்களது குடும்பங்கள், சமுதாய ஆகியோருடன் உயிர்ப்புடன் ஈடுபடுதல், பிள்ளைநேய முறைமைகள், கொள்கைகள், பழக்கவழக்கங்கள், விதிகள் என்பவற்றையும் வழங்கும் ஒரு இடமாக பிள்ளைநேய முன் ஆரம்பப்பாடசாலைகள் அமையப்பெறுவதை இன்று எதிர்பார்க்கின்றனர். இந்த விடயங்களில் அதிக கரிசனை கொண்டு காணப்படுகின்ற முன்பள்ளி நிலையங்களில் இருந்து பாடசாலைக்குச் சென்று ஆரம்பக்கல்வியை பெறுகின்றபோது சிறந்த மாணவ சமூகத்தைக் கட்டியெழுப்பலாம். அதற்கேற்றவாறு முன்பள்ளி ஆசிரியரும், ஆரம்பக்கல்வி ஆசிரியரும் இணைந்து சிறந்த செயலாற்றுதல் அவசியமாகும்.
கற்கும் திறனை வகைப்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் புத்தாக்க பயிற்சியில் ஆசிரியர்களுக்கு அறிவுரை
வகுப்புகளில் பாடங்களைக் கற்பிக்கும்போதே மாணவர்களை திறனுடையோர், மெல்லக்கற்போர் எனத் தனித்தனியாக ஆசிரியர்கள் வகைப்படுத்த வேண்டும். இதில் மெல்லக் கற்போருக்கான குறைந்தப்பட்சக் கட்டகம் தயாரித்து, அதனை மாணவர்களுக்குத் திறம்பட பயிற்சியளித்து, சம்மந்தப்பட்ட பாடத்தில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுத்தர வேண்டும். எளிதில் புரிந்துகொள்ள முடியாத, மெல்லக்கற்கும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகளும், குறுந்தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும்.
மேலும் தொடர்பயிற்சி, தொடர் கண்காணிப்புகளின் மூலம் மாணவர்களை ஊக்குவித்து, அச்சமின்றி தேர்வெழுதச்செய்ய வேண்டும்.
மேலும் தொடர்பயிற்சி, தொடர் கண்காணிப்புகளின் மூலம் மாணவர்களை ஊக்குவித்து, அச்சமின்றி தேர்வெழுதச்செய்ய வேண்டும்.
Referance: goo.gl/U1brfd
Copy short URL
கருத்துகள்
கருத்துரையிடுக