வைர வரிகள்-1

சோம்பல் 

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் 
கொன்றை வேந்தன் 

சோம்பல் உள்ளவர்க்கு வாழ்வில் மிஞ்சுவது ஏக்கமும் ஏமாற்றமுமே 
கார்லைஸ் 

சோம்பல் என்பது மூடர்களின் நிரந்தர விடுமுறை நாள் 
செஸ்டர்பீல்ட் 

சோம்பல் எனும் கோழிக்குஞ்சு மெல்லநடந்தால் 
வறுமைப்பருந்து வந்து பிடித்துவிடும் 
ப்ராங்ளின் 

சோம்பல் மனித இனத்தையே செல்லரிக்கிறது 
விர்ஜினியம் வுல்ப் 

சோம்பலாக சும்மா இருப்பவரைத் தவிர மற்றவர் யாவரும் நல்லவரே 
வால்டேர் 

சோம்பலானது அச்சத்தையும் குழப்பத்தையும் வளர்க்கிறது 
டேல் ஸார்னி 

சோம்பலினால் புத்தி மழுங்கும் நல்ல ஒய்வினால் உற்சாகம் வரும் 
மாண்டெய்ன் 


துன்பம் 


ஞாபகக் குப்பை மறைந்தால் மற்ற குப்பையெல்லாம் திரவியம்தான் 
தாமுசிவராம் 

தாங்காத துயரத்திலும் தளராத மனமே துணிவு என்ற பண்பு 
ஹெமிங்வே 

துக்கம் கூட நாளானால் தேயும் கவலை நாளுக்கு நாள் வளரும் 
சாத்ரே 

துச்சிலிருந்தும் துயர் கூறா மாண்பு இனிது 
பூதஞ்சேந்தனார் 

துயரம் கூட வாழ்வுக்கு ஞானம் தரும் ஒரு மருந்து தான் 
கெளபர் 

துயரில் இருந்து மீண்டும் நெருப்புக் கோழியென உயிர்த்தெழு வேண்டும் 
மெர்சன் 

துயரில் சிறந்த ஆசான் வேறு யாரும் இல்லை 
டிஸ்ரே 

துன்பம் கலவாத இன்பத்தை தேடுவதே மனித வாழ்வின் குறிக்கோள் 
எபிக்யூரஸ் 

துன்பம் கூட நிரந்தரம் இல்லாததுதான் பிறகேன் கவலை 
தெரசா. 


தூரத்திலிருந்து துணிச்சலாக பேசுவது யாருக்கும் சுலபம் 
ஈசாப் 

தோன்றி அழிவதுதான் வாழ்க்கை 
இங்கு துன்பத்தோடின்பம் வெறுமையாம் 
பாரதி 

வறுமை 


நூல் அறிவே ஆகுமாம் நுண்ணறிவு 
மூதுரை 

சாப்பிட்ட பின்தான் தானே சிந்தனை,செயல்,உறவு,உறக்கம் எல்லாம் 
விர்ஜினியாவுல்ப் 

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 
UNKNOWN 

செல்லாத காசுகளை சேகரிக்கும் உண்டியலே இடுகாடு 
வைரமுத்து 

செல்வத்தால் சன்மார்க்கம் வராது 
அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது 
ஆவ்பரி 

சென்றதினி மீளாது சென்றதனைக் கருத வேண்டாம் 
பாரதியார் 

சொல்பவரின் ஆர்வமானது 
கேட்பவரின் கொட்டாவியால் கரைந்து விடும் 
ஓவிட் 


ஏக்கம் 


காட்சிகளுக்கு அப்பால் செல்லும் அறிவின் பிழையே கடவுளை கற்பிக்கிறது 
இம்மானுவேல் காண்ட் 

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் 
கற்பனை சந்தோசத்தில் அவரது கவனம் 
கண்ண்தாசன் 

காதல் இல்லாததை விட நட்பு இல்லாததால்தான் திருமணம் முறிகிறது 
பிரடரிக் நீட்ஸே 

காதலில் தோற்காமல் இருக்க் வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே 
ஆஸ்கார்வொயில்ட் 

காய்ச்ச பலா கனி உண்ணாது 
ஈச்சம் பழத்துக்கு இடர் உறுவார் காமுகர் 
திருமூலர் 

கிட்டாதாயின் வெட்டென மற 
கொன்றை வேந்தன் 

கிடைப்பதை எட்டி உதைக்கிறோம் 
கிடைக்காதற்கு ஏங்குகிறோம் 
இராமகிருஷ்ணர் 

கீழ்படிபவனே கட்டளையிட தகுதியுடையவன் 
லாபுரூயர் 

குடம் உடைந்தாலும் வைப்பர் 
உடல் உடைந்தால் நொடிப்பொழதும் வையார் 
திருமூலர். 

குருட்டுதனத்தை விட கொடுமையானது 
இல்லாததை இருப்ப்தாக பார்ப்பது 
தாமஸ் ஹார்டி 

குலுக்கி விட்ட மரக்கால் போன்று 
ஏக்கம் துக்கம் எல்லாம் படிந்து போகிறது 

கவலை 


கட்டாயபடுத்தபட்ட கருத்துக்கள் பொய்யைவிட உண்மைக்கு எதிரிகள் 
பிரடரிக் நீட்ஸே 

கடந்த துயரத்தை திரும்பி பார்த்து சிரித்து பழகுவோம் 
வால்டர் ஸ்கார்ட் 

கண்ணாடியே உண்மையானது ஒளிவு மறைவில்லாமல் உண்ணைகாட்டும் 
சாமுவேல்பட்லர் 

கண்ணுவதல்லால் கவலை படேல் நெஞ்சே 
நல்வழி. 

கயிறின் நுனிக்கு வந்தாலும் ஒரு முடிச்சை போட்டு தொங்கு 
ஜெப்பர்ஸன் 

கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது 
எமர்ஸன் 

கற்றும் தவறுபவர்களை விட கல்லாதவரே நல்லவர்கள் 
சொபக்ள்ஸ். 

கனவுகளே எதிகால உருவாக்கத்தின் முதல் வரைபடம் 
விக்டர் ஹீயுக்கோ 

கஷ்டங்களும் நஷ்டங்களும் மனதுக்கு அறிவும் ஆற்றலும் தரும் 
ப்ராங்களின் 

நோக்கம் 


எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன 
எமர்சன் 

ஒசை ஸ்பரிசம் உருவு சுவை நாற்றம் ஆசை படுத்துது துயரே 
அவ்வையார். 

ஒரு பெண்ணுக்கு ஒரு மனிதனை முட்டாளாக்க இருபது நொடி போதும் 
ராபர்ட் பிராஸ்ட் 

ஒரு பொருளின் அருமையை அதை இழந்த பிறகுதான் உணர முடியும் 
இந்திராபார்த்த சாரதி 

ஒரு மணி நேரத்தை உபயோகமில்லாது வீணடிப்பவன் 
வாழ்வீன் மதீப்பீடு அறியான் 
சார்லன்டார்வின் 

ஒவ்வொரு ஆட்சி முறைக்கும் ஒரு குணமும் மொழியும் உண்டு 
பிளேட்டோ 

ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு 
அரிஸ்டாடில் 


சோகம் 


உங்கள் கவலையின் நிழல்களை பின் தொடராதீர்கள் 
ஜேம்ஸ் ஆலன் 

உடல் நோவு என்பது உலகின் துயரங்களில் கொடியது 
அகஸ்டின 

உடைந்த உள்ளங்களும் இல்லங்களும் நோய்க்கு விதைகள் 
ஆன்டர்சன் 

உடைமைகள் அதிகரிக்க அதிகரிக்க ஆசைகளும் அதிகமாகிப் போகும் 
சாமுவேல்பட்லர் 

உணர்வுடையார்க்கு உறுதுயர் ஏதும் இல்லை 
திருமூலர் 

உணவு உண்ணாமல் யாராலும் சிந்திக்க முடியாது 
விர்ஜினியாவுல்ப் 

உணவை சுவையாக்கும் உன்னத பொருள் பசியின்றி வேறில்லை 
சேக்ஸ்பியர் 

உலகைத்தவறாகபுரிந்து கொண்டு அது ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம் 
தாகூர் 

உலகையும் உடம்பையும் வெறுத்துப் பேதும் பேச்சு வெறும்பேச்சு 
மறைமலைடிகளார் 

உழைப்பை விட கவலை என்பதே பலரை காவு கொடுக்கிறது 
ராபர்ட் பிராஸ்ட்
 
உள்ளதெல்லாம் உயிரென்றபின் உள்ளங் குழைவதேனோ 
பாரதி 

உள்ளம் சுலபமாக சோர்வதில்லை உடல் அதற்கு ஒத்துப்போவதில்லை 
பைபில் 

உறக்கத்தில் கூட உள்ளத்தின் விழிஉறங்குவதில்லை 
எக்கில்ஸ் 

உன் பார்வையிலேயே சோகம் எழுதபட்டுள்ளது 
சொபக்ஸ 


துணிவு 


எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி 
ஈரோடு தமிழன்பன் 

எல்லா உயிரையும் தன்னுயிர் போல காண்பவனுக்கு அகந்தையில்லை 
இஷாஉபநிடதம் 

எவருமில்லை சாதியில் இழிந்தவர் 
பாரதி. 

ஏமாற்றுபவர் கண்கள் ஏமாறுபவர்களை சுலபமாக கண்டுபிடிக்கும் 
மாக்யவல்லி 

ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை 
பாரதி. 

ஏற்றம் தொடங்காக் கடலின் துணிவு எய்தி நின்றான் 
கம்பன் 


செருக்கு 


இசை வேன்டி நசையழிந்து வசைநீக்கி புகழெய்து 
புறநானூறு 

உண்மை அன்பு ஒரு போதும் சந்தேகப்படாது பழிவாங்காது 
மகாத்மா 

உண்மைப் பொருளும் உலோகாயுதன் உணர்வே 
மணிமேகலை 

உண்மையான நல்ல மனிதன் யார் ஒருவரையும் துவேசம் செய்வதில்லை 
நெப்போலியன் 

உதிக்கும் உலையுள் உறுதீ என ஊதை பொங்க 
கம்பன் 

உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும் 
ஆஸ்கார் ஒயில்டு 

உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது 
அரவிந்தர் 

உள்ளம் விழிப்புடன் உணர்ச்சிகள் தூங்க உழைத்தால் வெற்றி நிச்சயம் 
வால்டர் ஸ்காட் 

உளையா அறம் வற்றிட ஊழ் வழவுற்ற சீற்றம் 
கம்பன் 

ஊணுடல் நிலையன்று உள்ளத்தில் செருக்கு வேண்டாம் 
கபீர்தாசர் 

அவதூறு 


அகங்காரம் அடிமையாகத்தான் இருக்கும் அது மற்றவரையேசார்ந்திருக்கிறது 
ஓஷோ 

அகந்தையைக் கழுவாமல் கந்தையைக் கழுவி தூய்மை யில்லை 
புத்தர் 

அல்லல் செய்யல் உனக்கு அபயம் 
கம்பன் 

அவசரப்பட்டு தண்டிக்க துடிப்பவரை நம்பி விடக் கூடாது 
பிரரிக்நீட்ஸே 

அவதூறு தூற்றபடாமல் தப்பிய மாமனிதர் அபூர்வமேயாகும் 
கார்கி 

அழித்துவிட்டால் நலிவுமில்லை சாவுமில்லை மாணுடரே 
பாரதி. 

அற்ப மனங்களில்தான் பொறாமை எனும் நச்சு செடி வளரும் 
ஈசாப் 

அன்பு என்பது தொலை நோக்கி சந்தேகம் என்பது பூதக்கண்ணாடி 
பில்லிங்கஸ் 

அன்பு தன்னில் செழித்திடும் வையகம் 
பாரதி. 

அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது 
பாரதி. 

அன்ன தன்மை அறிந்தும் நீ அருளலை 
கம்பன் 

ஆசை சந்தேகம் துக்கம் யாவும் மனித ஆன்மாவுக்கு தீராத நோய்கள் 
கார்லைல் 

ஆணவ அறிவுள்ளவர் குருடரால் நடத்தப்படும் 
குருடர் போல குறிக்கோளில்லா மூடர்கள் 
UNKNOWN 

ஆதாயம்,உபயோகம் மற்றும் பலனுள்ள செயல்களே வெற்றியின் இரகசியம் 
டிஸ்ரேலி 

ஆராயாமல் முடிவெடுப்பதும் ஆதாரமில்லாமல் வெறுப்பதும் நல்லதல்ல 
கன்பூசியஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்