சைவ சித்தாந்த சாத்திரங்கள் (Shaiva Siddhantham)
சைவ சமயம் செழித்து வளர்ந்தது கி.பி. 7, 8, 9 - ஆம் நூற்றாண்டுககள் ஆகும். இக் காலக்கட்டங்களில் எண்ணற்ற சைவ நூல்கள் தோன்றின. அவற்றில் தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம் மற்றும் ஏனைய திருமுறை நூல்கள் தோத்திர நூல்கள் எனப்பட்டன. மேலும் சைவ சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவ நோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சைவ சாத்திர நூல்கள் எனப்பட்டன. இச் சைவ சமய சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்கு ஆகும். இப்பதினான்கு நூல்களையும் எளிதாக நினைவில் கொள்ள ஒரு வெண்பாவையும் எழுதி வைத்தனர் நம்முன்னோர்கள்.
அவை,
உந்தி களிறே உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவீடு உண்மைநெறி சங்கற்பம் உற்று. |
அவை,
- திருவுந்தியார் (Thiruvunthiyar)
- திருக்களிற்றுப்பாடியார் (Thirukalitruppadiyar)
- சிவஞான போதம் (Sivagnana Potham)
- சிவஞான சித்தியார் (Sivagnana Siddiyar)
- இருபா இருபது (Irupa Irupathu)
- உண்மை விளக்கம் (Unmai Vilakkam)
- சிவப்பிரகாசம் (Sivappirakasam)
- உண்மைநெறி விளக்கம் (Unmainerivilakkam)
- திருவருட்பயன் (Thiruvarutpayan)
- வினா வெண்பா (Vina Venba)
- போற்றிப் பஃறொடை (Porrippaqrotai)
- கொடிக்கவி (Kodikavi)
- நெஞ்சு விடு தூது (Nenju Vidu Thoothu)
- சங்கற்ப நிராகரணம் (Sangkarpa Nirakaranam)
கருத்துகள்
கருத்துரையிடுக