மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில அறிவுரைகள்

உங்கள் வாழ்வை மகிழ்ச்­சி­யாக நீங்கள் மாற்ற விரும்­பினால் முதல் மந்­திரம் இதுதான். எல்­லோ­ரையும் நேசி­யுங்கள்.



உங்­க­ளி­ட­மி­ருந்து அன்பை மற்­ற­வ­ருக்கு அனுப்­புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்­ற­வரை என்ன செய்­கி­றதோ இல்­லையோ உங்­களை, உங்கள் ஆரோக்­கி­யத்தைக் கடு­மை­யாகப் பாதிக்கும். எதற்கு மற்­றவர் மேல் கோபப்­பட்டு உங்கள் ஆரோக்­கி­யத்தைப் பலி கொடுக்க வேண்டும்? பதி­லாக ஒவ்­வொ­ரு­வ­ரையும் நேசி­யுங்கள். அன்பு காட்­டுங்கள். எதிரில் இருக்­கி­றவர் கையில் இருக்கும் ஆயு­தங்­களை அழிக்கும் சக்தி அன்­புக்கு உண்டு. அன்பை உங்­களுக்காக, உங்கள் மனம் மற்றும் உடல் நலனுக்­காகப் பயன்படுத்­துங்கள். 
Love everyone!

மனதில் எந்தப் பதட்­டமும் ஏற்­ப­டா­தி­ருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மன­திற்குச் சொல்­லுங்கள். நம்மைப் பொறுத்­த­வரை யாரும் கெடுதல் செய்­ப­வர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷ­யத்தை ஒருவர் செய்­து­வி­டுவார் என்ற எண்­ணத்தில் எப்­போதும் நாம் கெட்­ட­வர்­களைத் தேடிக்­கொண்டு இருக்­கிறோம். வேண்டாம். யாரும் கெட்­ட­வர்கள் இல்லை என்று ஒவ்­வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யாக நக­ரு­கி­றது என்று!  There are no bad Guys!

நாம் இந்த விஷ­யத்தைப் பற்றி கவ­லைப்­ப­டு­வதே இல்லை. நமக்­காக நம் மனம் கவ­லைப்­பட்டு முன்­பா­கவே சில செய்­திகள் சொல்­கி­றது. நாம்தான் அலட்­சியப்படுத்­து­கிறோம். ‘‘அடடா… அப்­பவே நினைச்சேன்…’’ என்று நாம் கை உதறும் சந்­தர்ப்­பங்கள் நமக்­காக நம் மனம் பேசி­யதைக் கேட்கத் தவ­றிய சந்­தர்ப்­பங்­கள்தான். எந்த விஷ­யத்­தையும் முடி­வெ­டுக்கும் முன் இரண்டு நிமிடம் மனச்சாட்­டி­யிடம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடி­வெ­டுங்கள். உங்கள் மனம் உங்­க­ளை­விட உங்­க­ளுக்­காக கவ­லைப்­ப­டு­கி­றது. Hear Your Mind Voice!

நன்­றாக இருக்­கிறோம் என்று நம்­புங்கள். நல்­லது நடக்­கி­றது என்று நம்­புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்­டி­ருக்­கிறோம் என்று நம்­புங்கள். நடந்த சில கசப்­பான சம்­ப­வங்­களும் நல்­ல­வற்றை அடை­யாளம் காட்­டவே நடந்­தன என்று நம்­புங்கள். நம்­பு­வது என்­பது மகிழ்ச்­சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்­தோ­ஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்­விட்­ட­தாக நினைக்­கி­றீர்­களா? சுல­ப­மாக கதவைத் திறந்து சந்­தோ­ஷத்தை அடைய முடியும். Key is to believe!

சில நேரம் தெரிந்தோ, தெரி­யா­மலோ தவறு செய்­து­வி­டு­கிறோம். அந்தத் தவ­று­களை மறப்­பது, வெட்­கப்­ப­டு­வது, அவ­மா­னப்­ப­டு­வது என்று மூன்று வழி­களில் எதிர்­கொள்­ளலாம். மறப்­பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்­புகள் ஏற்­படும். அவ­மா­னப்­பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனி­தனை அழுத்தும். மூன்­றா­வ­தாக இருக்­கிற வெட்­கப்­ப­டு­வ­துதான் நல்ல வழி. நம்­மையும் அழிக்­காமல், திரும்­பவும் நடக்­க­வி­டாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு. Be ashared of your mistakes!

பிறக்­கும்­போதே எப்­படி உங்­க­ளுக்குச் சில உரி­மைகள் வந்­து­வி­டு­கி­றதோ அப்­ப­டியே சந்­தோ­ஷ­மாக இருப்­பதும் வந்­து­வி­டு­கி­றது. எதற்­கா­கவும் உங்கள் உரி­மை­களில் எந்த ஒன்­றையும் இழக்­கா­தீர்கள். அதுவும் சந்­தோ­ஷ­மாக இருக்­கிற உரிமை உங்கள் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­கிற உரிமை. அதை இழப்­பதன் மூலம் உங்கள் ஆரோக்­கி­யத்தை இழக்க வேண்­டுமா என்று யோசி­யுங்கள். Happiness is your birthsight!

எந்தத் தவ­றுக்­கா­கவும் எவ­ரையும் ஒரு­முறை மன்­னித்துப் பாருங்கள். மன்­னிப்பு என்­பது அன்பைத் திறந்து வைக்­கிற சாவி. மன்­னிப்பு என்­பது மற்­ற­வ­ருக்கு மட்­டு­மல்ல, உங்­க­ளுக்கும் தேவைப்­ப­டு­வது. மற்­றவரை மன்­னிப்­பது போலவே உங்­க­ளையும் நீங்கள் மன்­னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உட­லுக்குக் கேடு தரும் எல்லா உணர்­வு­க­ளுக்கும் எதிரி. Forgive!

உங்கள் துயரம் எவ்­வ­ளவு அதி­க­மா­னது அல்­லது உங்கள் தோல்வி எவ்­வ­ளவு பின்­னோக்கி, தள்­ளி­யி­ருக்­கி­றது என்­பது முக்­கி­ய­மா­னது அல்ல. அதி­லி­ருந்து விடு­பட்டு உங்கள் நாளுக்­காக திட­முடன் காத்­தி­ருப்­ப­துதான் முக்­கி­ய­மா­னது. உங்கள் நாள் வரு­கி­றது என்று நம்­புங்கள். அதற்­காக காத்­தி­ருங்கள். Wait for your day!

பயம் என்­பது எதிர்­மறை சக்தி. உங்கள் உட­லையும், எதிர்­கா­லத்­தையும் அரிக்­கக்­ கூ­டிய சக்தி பயத்­திற்கு உண்டு. பயப்­ப­டாமல் எப்­படி இருப்­பது என்று நீங்கள் கேட்­கலாம். சுல­ப­மான வழி ஒன்று இருக்­கி­றது. பயத்­தை­விட்டு சற்றுத் தள்ளி நில்­லுங்கள். உங்­களைத் தொட்­டால்தான் ஆரோக்­கியக் கேடு. பக்­கத்தில் பயத்தை வைத்­து­விட்டு அது கொடுக்­கிற உத்­வே­கத்தில் வேலை செய்­யுங்கள். Away From Fear!

உங்­க­ளுக்குச் சில இடங்­களில் சுதந்­திரம் கிடைக்கும். சில இடங்­களில் கிடைக்­காது. கிடைக்­காத இடத்தைப் பற்­றிய அணு­கு­முறை வேறா­னது. ஆனால் கிடைக்­கிற இடத்தின் அரு­மையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்­தி­ரத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­தாமல் இருப்­ப­துதான் சரி­யான வழி. இந்த வழி வெற்­றி­களைத் தரு­வ­தை­விட, வெற்­றி­களை மேலும் அதி­க­மாக்க உதவும் என்­பதே முக்­கி­ய­மா­னது. Dont take things for granted.

நாம் என்ன இப்­படி இருக்­கிறோம்? நாம் எதற்­குமே லாயக்­கில்லையா? தொட்­டாலே தோல்­விதானா? நாம் போது­மான தகு­தி­யுடன் இல்­லையே? இப்­படி எல்லாம் உங்­க­ளையே நீங்கள் எதிர்ப்­பதைக் கைவி­டுங்கள். ஏன் உங்­க­ளுக்கு நீங்­களே எதி­ரி­யாக இருக்க வேண்டும்? எதிர்ப்­பதை நிறுத்­துங்கள். நீங்கள் எப்­படி இருக்­கி­றீர்­களோ? எவ்­வ­ளவு திறமை இருக்­கி­றதோ? அப்­ப­டியே உங்­களை ஏற்றுக் கொள்­ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்­சி­க­ர­மான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள். Accept who you are!

நீங்கள் அதி­க­பட்ச உய­ரத்தை அடைய வேண்­டுமா? இந்த ஒன்றை மட்டும் பின்­பற்­றினால் போதும். நீங்கள் செய்ய முடிந்­ததைச் சொல்லி அதைச் செய்­வ­தற்­காக முயற்சி செய்­யும்­போது உல­கத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்­கு­கி­றீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவை­யற்ற எதிர்­பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிர­தி­ப­லிக்கும். Sky what your are going to do!

இதற்குச் சுல­ப­மான வழி மற்­ற­வர்­க­ளுக்குக் கெடுதல் செய்­யாமல் இருப்­பது. வாய்ப்பு இருக்­கும்­போது நல்­லது செய்­வது. ஆசிர்­வா­தங்கள் உங்கள் வாழ்வின் உறு­தி­யான மகிழ்ச்­சிக்கு அடித்­தளம். மன­ம­றிந்து கெடுதல் செய்­யா­தீர்கள். Count your blessings!

இதன் மூலம் எதி­ரா­ளியின் மனதை உங்­களால் மதிப்­பிட முடியும். மற்­றவர் நிலையில் நின்று பார்ப்­பது ஒரு கலை. தேவை­யற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்­படி நின்று பார்க்­கும்­போது, அவர் சுய­ந­ல­மாக இருக்­கி­றாரா? அதனால் உங்­க­ளுக்கு பாதிப்பு இருக்­கி­றதா? என்று யோசி­யுங்கள். பாதிப்பு இருக்­கி­றது என்று தெரிந்தால் வில­கி­வி­டுங்கள். அவ்­வ­ள­வுதான். இதனால் உடல், மனம் இரண்­டுக்­கு­மான தேவை­யற்ற பிரச்சி­னைகள் தவிர்க்­கப்­படும்.

பெருந்­தன்­மையை மற்­ற­வ­ரிடம் எதிர்­பார்த்­து­விட்டு ஒவ்­வொரு சூழ்­நி­லை­யிலும் மகிழ்ச்­சியை உங்­க­ளுக்குக் கொண்­டு­வ­ராது. இப்­படி ஒவ்­வொரு குணம், செயல் என எல்­லா­வற்­றிலும் மற்­ற­வ­ரிடம் நீங்கள் என்ன எதிர்­பார்க்­கி­றீர்கள் என்­பதை யோசி­யுங்கள். நீங்கள் விரும்­பு­கிற அந்த குணம் உங்­க­ளிடம் இருக்­கி­றதா என்று கவ­னி­யுங்கள். Be the person you most want to be!

ஆம். உலகம் ஒரு விதத்தில் கண்­ணாடி. நீங்கள் எப்­படி இருக்­கி­றீர்கள் என்­பதைப் பிர­தி­ப­லிக்­கி­றது. இந்தப் பிர­தி­ப­லிப்பை உங்கள் செயல்­பா­டு­களே தீர்­மா­னிக்­கி­றது. உங்கள் எதிரே இருக்­கிற இந்தக் கண்­ணா­டியில் நீங்கள் எப்­படித் தெரி­ய­வேண்டும் என்று ஆசைப்­ப­டு­கி­றீர்கள் என்­பதை யோசித்துக் கொள்­ளுங்கள். World is your mirror!

பேச்சு பணம் என்றால் அமைதி என்­பது தங்கம். பணத்­தை­விட தங்­கத்­திற்கு மதிப்பும், கௌர­வமும் அதிகம். அமைதி காப்­பதால் வெளி­யி­லி­ருந்து வரும் பிரச்சி­னைகள் தவிர்க்­கப்­ப­டு­வ­தோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்­கு­கி­றது. அமை­தி­யான வாழ்­வுக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும். Silence is gold!

நீங்கள் ‘சரி’ என்­பதை அடைய விரும்­பு­கி­றீர்­களா? அல்­லது அமை­தியை அடைய விரும்­பு­கி­றீர்­களா? என்­பதை யோசி­யுங்கள்.
தவ­று­களை ஒப்புக் கொள்­வது சற்று சங்­க­ட­மாக இருந்­தாலும் அது அமை­தி­யையும், சந்­தோ­ஷத்­தையும் உங்­க­ளிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
கூடவே பெருந்­தன்­மை­யா­னவர் என்ற எண்­ணத்­தையும் உரு­வாக்கும். தவிர, செய்த தவ­று­களை ஒப்புக் கொள்­வதில் மனம் விசா­ல­ம­டையும். Accept your mistakes!

உங்கள் கன­வுகள், அதன் உயரம், அதை அடைய உங்­க­ளுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்­க­ளுக்கு மட்­டுமே தெரியும். அதனைச் சரி­யாக மற்­ற­வர்­களால் புரிந்து கொள்ள முடி­யாது. தவிர, நீங்கள் அதை அடைய முடி­யாத நேரங்­களில் மற்­ற­வர்­களின் ‘அச்­சச்சோ, அப்­பவே நினைச்சேன், இது தேவையா?’ போன்­ற­வற்றை தவிர்க்­கலாம். ‘கன­வு­களை மற்­ற­வ­ரிடம் பகிர்ந்து கொள்­ளலாம்’ என்ற எண்­ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்­வொரு நாளும் அதை நோக்கி நக­ருங்கள். Walk towards to your Dreams!

ஆம். ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் ஒரு எதிரி இருக்­கிறான். மற்­றவர் கண்­டு­பி­டிப்­ப­தை­விட நமக்கு நாமே கண்­டு­பி­டிப்­பதன் மூலம்தான் அவனை வெளி­யேற்றி வெற்­றியைப் பெற­மு­டியும். அது கோபமா? ஈகோவா? பொறா­மையா? என்­ன­வென்று யோசித்து வெளி­யேற்­றுங்கள். No Romance with your inner enemy!

இது மற்­ற­வற்­றை­விட உட­லையும், மன­தையும் அதிகம் பாதிக்­கக்­கூ­டி­யது. எதற்கு பயம்? உங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்­தது அல்ல. உங்கள் திற­மையால் கிடைத்­தது. ஆனால், உங்­களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் கார­ண­மாக இருக்­கலாம். பயம் பல­வி­தங்­களில் வெளிப்­ப­டலாம். கோபம், அத்­து­மீறல், அரா­ஜகம், நோய், வலி, துயரம், மீள­மு­டி­யாமை, சுய­லாபம், விட்­டொ­ழிக்க முடி­யாத நிலை, கடை­சி­யாக வன்­முறை. எதற்கு இதெல்லாம்? இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை. Get out of the Fear!

நல்ல மரத்தில் மோச­மான பழங்கள் பழுப்­ப­தில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்­காது. நல்ல எண்­ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்­களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்­ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்­ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்­ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளை­வுகள் சந்­தோ­ஷத்தின் கனி­க­ளா­கத்தான் இருக்கும். Be a good tree!

உங்­க­ளுக்கு கிடைத்த வாய்ப்பு சிறி­ய­தாக இருக்­கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறி­ய­தாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்­வ­ளவு சிறப்­பாக அதைச் செய்ய முடி­யுமோ, அவ்­வ­ளவு சிறப்­பாகச் செய்­யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்­லாமல் செய்­யுங்கள். அது பல வெற்­றி­களின் திற­வுகோல். Do your best every time!

உதவி செய்­வதன் மூலமே உங்கள் இத­யத்தின் சுவர் மெத்­தென்ற மலர்­களால் பொத்தி வைக்­கப்­படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்­ளுங்கள். ஒரு ஆத­ர­வற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்­ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்­க­ளுக்கு ஆறு­த­லாக நில்­லுங்கள். Help those who need help!

ஒவ்­வொரு செய­லுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்­கிற இரு­பக்க நாண­யத்தை வைக்­கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்­வொன்­றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்­லோ­ருக்­குமே சறுக்கல் உண்டு. ஒரு செய­லுக்கு நிறைவும் மறை­வுமே உண்டு. நிறைவு இல்­லாத போது தெரி­கிற மறைவில் நிறைவு மறைந்து இருக்­கி­றது. மறைந்து இருப்­பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்­தி­ருந்து திரும்ப நிறைவை அடை­யுங்கள். No such thing as Failure!

ஒவ்­வொ­ரு­வ­ருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்­கி­றார்கள். அவர்­க­ளுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதை­யெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்­கிற ஒவ்­வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்­தோ­ஷத்தை அடை­யுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்­வொரு நிமி­டமும் வாழுங்கள். Live every moment!

இதை நாம் சட்­டென்று உணர முடி­யாமல், கேட்­டது கிடைக்கவில்­லையே என்று வருத்­தப்­படுவோம். ஆனால், ஒவ்­வொரு பிரார்த் தனை­யுமே ஒவ்­வொரு பதி­லோடு தான் திரும்ப வரு­கி­றது என்­பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடி­வத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள். All prayers are answered!

எது தேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை கைப்பற்றுங்கள். கண் வையுங்கள். Focus!

பகிர்ந்து கொள்வதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். Share your life!

செய்ததையே செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை, உங்கள் வாழ்வை!

Source: https://goo.gl/bdHSBh

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்