பன்னிரு திருமுறை (Panniru Thirumurai)
சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர். இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார்.
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
திருமூலர் அருளிய திருமந்திரம்.
திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய,
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக