நம்பிக்'கை' இருக்கும்போது இடது கை எதற்கு? - சுகில் அப்பாஸ்

விளையாட்டு வீரர்களுக்கே உரிய உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு அனைத்தையும் கொண்டு, பரபரவென்று தீயைப்போல பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார் சுகில் அப்பாஸ். பேசும்போது அவ்வளவு அமைதியாக இருக்கும் சுகில், விளையாட்டு என்று வந்துவிட்டால் அதிரடியாக ஆடி பதக்கங்களைத் தன்வசம் ஆக்கிக்கொள்வார்!
இன்று இந்தியாவின் பாரா பேட்மின்டன் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர் சுகில் அப்பாஸ். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்குப் பிறக்கும்போதே இடக்கை இல்லை. எனவே, வலது கையால் தன்னுடைய பதின்ம வயதில் பேட்மின்டன் விளையாடத் தொடங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மாநில அளவு, தேசிய அளவு என்று ஆரம்பித்த இவரது பேட்மின்டன் பயணம், இந்தோனேசியா, உகாண்டா, ஸ்பெயின், ஆசிய விளையாட்டுப் போட்டி என்று விரிந்தது. இன்று சர்வதேச அளவில் இரண்டு வெண்கலப்பதக்கங்கள், மூன்று வெள்ளிப்பதக்கங்கள் என்று சாதனைகள் புரிந்துகொண்டிருக்கிறார் சுகில்! 
பத்தொன்பது வயதில் தொழில் முறை விளையாட்டு வீரராகக் களமிறங்கிய சுகில் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது. சுகிலின் அப்பா அப்பாஸ் அச்சகம் ஒன்றில் பணிபுரிகிறார், அம்மா இல்லத்தரசி. திறமை இருந்தாலும் தான் பயிற்சி பெறவும், தன்னுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளவும் சுகிலுக்கு பண உதவி தேவைப்படுகிறது. மாற்றுத்திறனாளி என்றாலும் மனம் தளர்ந்து போகாமல், தனியார் பேட்மின்டன் அகாடெமிகளில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்து, அதன்மூலம் ஆறாயிரம் ஏழாயிரம் என மாதந்தோறும் பெற்று நிலைமையைச் சமாளித்து வந்துள்ளார். நேஷனல் விளையாடும்போது சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகிய வீரர்களை உருவாக்கிய கோபிசந்த் அகாடெமியில் பயிற்சி பெற சுகிலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கும் பல மாதங்கள் போராடவேண்டி இருந்துள்ளது. முதலில் அங்கு பயிற்சிக்கட்டணம் பெறப்பட்டாலும், சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஆரம்பித்தபின், இப்போது சுகிலுக்கு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
சர்வதேச தரவரிசையில் தற்போது 16வது இடத்துக்கு முன்னேறியிருக்கும் சுகில், அக்டோபர் மாதம் டென்மார்க்கில் நடக்கவிருக்கும் சர்வதேசப் போட்டிக்கும், நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கும் செல்ல வேண்டும். 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருக்கும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே சுகிலின் பெருங்கனவு. பாராலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதியடைய சுகில் இன்னும் பதினான்கிற்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்றாக வேண்டும்.
``குறைந்தபட்சம், ஒருவருடத்துக்கு 6 சர்வதேசப் போட்டிகளிலாவது பங்கேற்றால் மட்டுமே பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெறமுடியும். இவ்வருடம் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில் 2-ல் மட்டுமே நான் பங்கேற்றுள்ளேன். மீதி இரண்டு போட்டிகளுக்குச் செல்ல நிதியுதவி கிடைக்கவில்லை. இந்த வருடம் 2 சர்வதேசப் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், டென்மார்க் போட்டியிலும், ஆஸ்திரேலியப் போட்டியிலும் பங்குபெறுவது கட்டாயமாகும்!"  - சுகில்.
சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற சுகிலுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. நிதியுதவி பற்றாக்குறை காரணமாக, கனவுகளும், திறமையும் மறைந்துவிடும் சூழ்நிலையில்தான் தற்போது சுகிலின் நிலைமை.
``சர்வதேசப்  போட்டிகளில்  விளையாட எனக்கு ஸ்பான்சர்கள் யாரும் இல்லை. என் நண்பர்களிடம்தான் பண உதவி கேட்கலாம் என இருக்கிறேன். அரசு எங்களுக்கு உதவிகளைச் செய்துவந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எங்களின் செலவிலேயே செல்லவேண்டியுள்ளது." - சுகில்.
நீங்கள் சுகிலுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் Edudharma மூலமாக,https://www.edudharma.com/campaigns/for-para-champion-sugil எனும் லிங்கிற்குச் சென்று உதவலாம். போதுமான உதவிகள் கிடைத்தால், சுகில் மிகப்பெரிய உயரங்களுக்குச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை. தமிழனின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்திப்பிடித்திட அறம் செய்வோம்!
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.
Source:https://goo.gl/N2VJux

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்