நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham)

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். 

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும். ‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்விய பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும் . இதைத் திராவிட வேதம் என்பர். 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்