உங்களின் முன்னாள் காதலி/காதலனை ஸ்மார்ட்டாக பழிவாங்க வேண்டுமா? இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க!
Relationship | உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு விலகி விட்டால், அதை நினைத்து கொண்டே வாழ்வை கடக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்கு மாறாக அவர் முன் நீங்கள் சிறப்பாக வாழ்ந்து காட்டலாம்.
பொதுவாக காதல் உறவு அல்லது குடும்ப உறவில் உள்ள இணையுடன் இருந்து, பிரிந்து வந்துவிட்டால் மோசமான வலியை நாம் எதிர் கொள்ள நேர்ந்திடும். ஆண், பெண் உறவு என்றாலே இது போன்ற பல சிக்கல்களும், வலிகளும் வருவது இயல்பு தான். என்றாலும், சில சமயங்களில் நம் மீது எந்த தவறும் இல்லாமல் இருக்கும். அது போன்ற சமயங்களில் நமது இணை நம்மை விட்டு பிரிந்து சென்றால், அது நீங்கா வலியாக மாறி விடும். இந்த சூழலில் உங்களின் முன்னாள் இணையை நல்ல முறையில், ஸ்வீட்டாக பழிவாக சில வழிகள் உண்டு. அவை என்னென்ன என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
உடல் மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவது: உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு விலகி விட்டால், அதை நினைத்து கொண்டே வாழ்வை கடக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்கு மாறாக அவர் முன் நீங்கள் சிறப்பாக வாழ்ந்து காட்டலாம். இதற்கு உடலை முதலில் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஜிம், யோகா, டான்ஸ் போன்றவற்றில் உங்களின் கவனத்தை தரலாம். இதனால் நீங்களும் ஆரோக்கியமாக உணரலாம். அத்துடன் உங்கள் முன்னாள் துணையை நினைத்து நீங்கள் வருந்தவில்லை என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்துங்கள்: உங்களை விட்டு பிரிந்த துணையை நல்ல முறையில் பழிவாங்க, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை அவர் தெரிந்து கொண்டாலே போதும். இதற்கு உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள். இதை உங்கள் முன்னாள் துணை அறிந்து கொண்டால், அவ்வளவு தான். இதுவே ஒரு நல்ல பழிவாங்கலும் ஆகும்.
உங்கள் உணர்வுகளை பதிவுகளாக வெளிப்படுத்தலாம்: உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த இணைய தளமும் ஒரு நல்ல வழி தான். உங்களின் முன்னாள் உறவு குறித்து உங்களுக்கு தோன்றுவதை ஒரு பதிவாக எழுதி போஸ்ட் செய்யலாம். இதனால் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் புதைத்து வைத்திருந்த பல விஷயங்களை நீங்கள் வெளிப்படுத்த முடியும். எனவே உங்கள் மனம் சற்று சாந்தமாகும். அதே போன்று உங்களின் பழைய நினைவுகளை நினைத்து கொண்டு இருக்கும் பழக்கமும் மாறும்.
புதிய உறவு: உங்கள் முன்னாள் உறவு சரியாக இல்லை, காதல் பிரிந்து விட்டது என்பதற்காக உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. உங்களின் வாழ்க்கை பயணத்தில் பலவிதமான புதிய மனிதர்களை சந்திக்க நேரிடும். அவர்களில் உங்கள் மனதிற்கு பிடித்தவரை துணையாக தேர்வு செய்யலாம். அவருடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போன்று கடந்த கால வாழ்க்கை பற்றியும் தெரிய படுத்துங்கள். முக்கியமாக, இந்த முறை உங்கள் பக்கம் இருக்க கூடிய தவறுகளையும் திருத்தி கொண்டு புது வாழ்க்கையை தொடங்குங்கள். இந்த முயற்சி உங்கள் முன்னாள் துணைக்கு சிறந்த பதிலடியாக இருக்க கூடும்.
Source: https://go.ly/EVbk8
கருத்துகள்
கருத்துரையிடுக