பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி போடுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்!

 சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சிலர் இது நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம் தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம் தாங்க. எதற்கும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த பயமும் இருக்காது. தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். பயப்படுவதால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியாது. துணிந்து செய்யுங்கள் உங்கள் செயல்களை. வெற்றி உங்கள் வசம் தான்.
முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம். ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்தில் அவனையே அழித்து விடும். ஒருவனுடைய தயக்கம் அவனை வளர விடாமல் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தயங்காமல் செய்து முடித்து வெற்றி வாகை சூடுங்கள். பயமும் தயக்கமும் இருந்தால் எந்த செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் செயல்களைத் தொடங்குங்கள். பயத்தை தூக்கியெறியுங்கள். வெற்றி வேண்டுமா அப்போ பயத்துக்கும் தயக்கத்துக்கும் குட் பை சொல்லுங்க.

Source: https://go.ly/dG2sZ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்