அலுவலகத்தில் திறமை மற்றும் கடின உழைப்பாளியாக இருந்தும், ஏன் வெற்றிபெற முடிவதில்லை தெரியுமா?

 நீங்கள் மிகவும் திறமையானவர். கடின உழைப்பாளி மற்றும் உங்களுடைய சுற்றத்தாரின் உகந்த நண்பர். எனினும் வெற்றி என்பது உங்களிடம் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்களுடைய திறமை வீணாவதாக உணர்கின்றீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவிப்பது மற்றும் உங்களுடைய இலக்குகளை அடைய வேலை செய்வது ஆகிய இரண்டிற்கும் இடையே கிடந்து அல்லாடுகின்றீர்கள். பின்னர் ஏன் நீங்கள் கனவு கண்ட வெற்றியை அடையவில்லை.

கடின உழைப்பு மட்டுமே வெற்றி பெற ஒரே வழி என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. அது முற்றிலும் சரி. எனினும் நீங்கள் வெற்றி பெற கடின உழைப்பு விட வேறு சில காரணிகளும் தேவைப்படுகின்றது. நீங்கள் உங்களை அறியாமல் புரியும் சில தவறுகள், நீங்கள் உங்களுடைய முழுத் திறனை பயன்படுத்தவிடாமல் உங்களைத் தடுக்கின்றன. அந்தத் தவறுகளை கண்டுபிடித்து திருத்திக் கொண்டால், வெற்றியானது உங்களிடம் நிரந்தரமாக வாசம் புரியும். எனவே வாழ்வில் வெற்றி பெற இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளைப் பற்றி மேலே தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் வெற்றி பற்றி மிகவும் ஆவலாக இருக்கின்றீர்கள் 
அதிக ஆர்வம், நீங்கள் உங்களுடைய முழுத் திறனுடன் வேலை புரிவதைத் தடுக்கின்றது. தவறுகளைப் பற்றி பயப்பட வேண்டாம். வாழ்வில் வெற்றி பெற்ற பிரபலங்கள் தங்களுடைய வாழ்வில் பல்வேறு தவறுகளைப் புரிந்துள்ளனர். ஆயினும் அவர்கள் துவண்டு விடவில்லை. விடாது முயற்சி செய்து வெற்றியை ருசித்தார்கள்.

உங்களுக்கு நீங்களே உண்மையாக இல்லை 
இந்த உலகில், மிகப்பெரிய சவால் ஒன்று உண்டெனில் அது நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். கூட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நீங்கள் எளிதாக விட்டுக் கொடுத்து விட்டீர்கள் மற்றும் உங்களின் அடையாளத்தைத் தியாகம் செய்து விட்டீர்கள் என அர்த்தம் கொள்ளலாம். எத்தனை முறை உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்களுடைய குழு தெரிவித்த காரணத்திற்காக பிறருடைய கருத்துகளை ஒத்துக் கொண்டீர்கள் என எண்ணிப் பாருங்கள். மேலும் உங்களுடைய குழுவிடம் ஒரு மோதலை விரும்பாமல் அவர்களுடைய கருத்திற்கு எதிர்மறையான கருத்தை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விட்டீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். உங்களுக்குச் சரி எனத் தோன்றினால் உங்களுடைய குழுவின் கருத்தில் இருந்து தனித்து, உங்களுடைய கருத்தை தெரிவிக்கத் தயங்காதீர்கள். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது நீங்கள் தனித்து விடப்பட்டாலும், நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.

உங்களுடைய வேலையைப் பற்றி அதிகம் புலம்பாதீர்கள் 
நாம் அனைவரும் நம்முடைய வேலையை முடித்த பிறகு நண்பர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக ஒரு சில பீர்கள் அருந்துவதை மிகவும் நேசிக்கின்றோம். ஆனால் அப்பொழுது கூட நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் உங்களின் வேலையைப் பற்றி அதிகமாகத் தர்க்கம் புரிவதை வழக்கமாக வைத்திருக்கின்றீர்களா? ஆம் எனில் அத்தகைய பழக்கம் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களின் செயல் திறனைக் கண்டிப்பாக பாதிக்கும். நம்முடைய உணர்வு, பேச்சு, எண்ணங்கள் ஆகிய அனைத்தும் நம்முடைய மனநிலையைப் பாதிக்கின்றது. இனிய எண்ணங்கள் நேர்மறை தாக்கத்தை உருவாக்கும். 

நீங்கள் உங்களுடைய வேலையைப் பற்றி அடிக்கடி புலம்புவீர்கள் எனில் கண்டிப்பாக அதை உடனே நிறுத்துங்கள். உங்களுடைய வேலையை, உங்களுடைய வாழ்க்கையை, மற்றும் உங்களுடைய முதலாளியை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனது சொல்வதை கேட்பதில்லை நாம் சில சமயங்களில் ஒரு செயலை தொடர்ந்து செய்கின்றோம். எனினும் நாம் அவற்றை விரும்பிச் செய்வதில்லை. நாம் அச்செயலைச் சரி என நினைப்பதால் அவற்றைத் தொடர்கின்றோம். அப்பொழுது நாம் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றோம். உங்களுக்கு கூட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். எவர் ஒருவர் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றாரோ அவருடைய தனித்தன்மை இறந்து விட்டதாகக் கருதலாம். 

நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுகின்றீர்கள் உங்களிடம் உள்ள அதீத ஆர்வம் தளர்ச்சியை உருவாக்கிவிடும். நீங்கள் சிறந்த, கூர்மையான, வலிமையான மற்றும் மகிழ்ச்சியானவர்களைக் கண்ணுறும் பொழுது, உங்களைச் சுற்றி ஜோலிப்பவர்கள் அதிகம் இருப்பதாக நினைத்து அயர்ந்து போவீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால், உங்களுக்கான வாழ்க்கைப் பந்தயத்தில் கண்டிப்பாகத் தோற்று விடுவீர்கள். எனவே தயவு செய்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். 

ஒரு சிறிய மற்றும் ஆரோக்கியமான போட்டி உங்களின் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. 
ஆனால் பொறாமை உங்களைக் கண்டிப்பாக முன்னேற விடாது. உங்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை தன்னிச்சையாகச் செயல்பட்டு வாழ்க்கையை அந்தந்த நொடியில் அனுபவிப்பது பரவாயில்லை என்றாலும், உங்களின் வாழ்க்கையை திட்டமிட்டு கட்டமைப்பது மிகவும் முக்கியம். நான் நாற்பது வயதில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாறுவதற்குத் திட்டமிடுவேன் என உங்களின் இலக்கை நிர்ணயிக்காமல், அடுத்த வருடம் நான் கண்டிப்பாக இந்தத் திறனை வளர்த்துக் கொள்வேன் எனத் திட்டமிடுங்கள். 

நீங்கள் உங்கள் வேலையை நேசிக்கின்றீர்கள் எந்த ஒரு இலக்கும் இன்றி அலைபாய்கின்றீர்கள். 
நீங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவதில்லை. உங்களைச் சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது உங்கள் குடும்பம் நீங்கள் செய்யும் வேலையை மதிக்கின்றதா? உங்கள் நண்பர்கள் ஒரு ஆக்கப்பூர்வமற்ற வழியில் உங்களின் வேலையை விமர்சிக்கின்றார்களா? ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்றவர்கள் உங்களின் வேலை மற்றும் உங்களைப் பற்றி தவறாக நினைத்தால், அது உங்களின் நம்பிக்கையைத் தகர்த்து உங்களின் உற்பத்தியைப் பாதிக்கிறது. நம்பிக்கையற்ற தன்மை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கள் உங்களின் வேலையில் முழுமனதுடன் ஈடுபடுவதைக் கண்டிப்பாக தடுக்கும். நீங்கள் உங்கள் நாளின் முதல் பாதியை வீணடிக்கின்றீர்கள் ஆமாம், அம்மாவின் கூற்று மிகவும் சரியே. சீக்கிரம் இரை தேடச் செல்லும் பறவைக்கே உணவு கிடைக்கும். தாமதமாகத் தூங்கி, தாமதமாக எழுந்து மிகவும் தாமதமாக மதிய உணவிற்குப் பதிலாக காலை உணவை உட்கொண்டு, உடற்பயிற்சியைத் துறந்து (, நிச்சயமாக, ஏனெனில் நீங்கள் தாமதமாக எழுவீர்கள்), அலுவலக வேலையை மிகவும் தாமதமாக ஆரம்பிப்பது நிச்சயம் உங்களுக்கு வெற்றி தேடித்தராது. உங்களில் சிலர் நாங்கள் ஒரு இரவுப்பறவை, எங்களுக்குக் காலை என்பது கிடையாது என வாதிடலாம். உங்களால் காலையில் படிக்க முடியாது மற்றும் பிற வேலை செய்ய இயலாது எனில் தயவு செய்து காலை வேளையை ஒரு வேலையும் செய்யாமல் வீணாக்காதீர்கள். நீங்கள் ஒரு இரவுப்பறவை எனில், குறைந்த முயற்சி தேவைப்படும் வேலைகளைக் காலை நேரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். மிகவும் கடினமான வேலைகளை மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

உங்களிடம் ஆற்றல் குறைவாக இருக்கின்றது 
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டம் ஆகும். அதன் காரணமாக நம் ஒவ்வொருவருடைய உடல்நிலையும் பாதிக்கப்படுகின்றது. காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பது, அலுவலக வேலையை ஜங்க் உணவுடன் ஆரம்பிப்பது, மற்றும் கணக்கற்ற டீ மற்றும் காபி அருந்துவது போன்ற நம்முடைய வாழ்க்கை முறை நம்முடைய உடல்நிலையை கடுமையாகப் பாதிக்கின்றது. ஒரு மணி நேரத் தீவிர உடற்பயிற்சியானது உங்களின் வாழ்க்கைமுறையால் பாழ்பட்ட உங்களின் உடல் நிலையைச் சரி செய்ய போதுமானது என நீங்கள் நினைக்கின்றீர்களா? நாம் அனைவரும் ஊட்டச்சத்து மற்றும் விட்டமின் குறைபாட்டுடன் இருக்கின்றோம் என்பதை உணராமல் இல்லை. நீங்கள் வண்டி ஓட்டி வீட்டிற்கு வந்த பிறகு உங்களுக்கு வரும் தலைவலியே உங்களின் உடல் நிலையை உங்களுக்கு உணர்த்தி விடும். வாழ்வில் வெற்றி பெற நம்முடைய உடலை உறுதியாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் உங்களை நன்றாக வெளிப்படுத்தவில்லை இது விழுங்குவதற்கு கசப்பான உண்மை. திறமை மற்றும் கடினமாக வேலை செய்த போதிலும், உங்களால் வெற்றி பெற இயலவில்லை. உங்களால் உங்கள் திறமை மற்றும் முயற்சிகளுக்குத் தகுந்த பாராட்டு அங்கீகாரம் பெற முடியவில்லை. நீங்கள் எங்குத் தடுமாறுகின்றீர்கள்? உங்களால் உங்களைத் திறமையாக விற்க முடியவில்லை. வெற்றி பெற திறமை மற்றும் கடின முயற்சி மட்டும் போதுமானதாக இல்லை; நீங்கள் மிகவும் வலுவாக உங்களின் உண்மையான மதிப்பை நம்ப வேண்டும். அப்பொழுதுதான் இந்த உலகம் உங்களை நம்பத் தொடங்கும்.

Source: https://go.ly/v96Be

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்