குழந்தை பருவ உணர்ச்சி புறக்கணிப்பால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்!

 

குழந்தை பருவத்தில் ஒரு குழந்தைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாமல் போவது பிற அதிர்ச்சிகளை போலவே தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.

உடல் மேல் நடத்தப்படும் தாக்குதல் வடுக்களை ஏற்படுத்தும். அதே சமயம் உணர்ச்சிகள் மீதான தாக்குதல் அல்லது புறக்கணிப்பு சில நேரங்களில் மனநோய்களை ஏற்படுத்தி விடும். குறிப்பாக குழந்தை பருவத்தில் ஒரு குழந்தைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாமல் போவது பிற அதிர்ச்சிகளை போலவே தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.

குழந்தை பருவ உணர்ச்சிப் புறக்கணிப்பு (Childhood emotional neglect) என்பது குழந்தையின் உணர்ச்சி தேவைகளுக்கு உரிய பதில் அளிக்க தவறி பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் செய்யும் தவறு ஆகும். இந்த வகை புறக்கணிப்பு குழந்தையிலிருந்து பெரியவர்கள் ஆனாலும் கூட சிலருக்கு நீண்ட கால விளைவுகளையும், சில நேரங்களில் குறுகிய கால கிட்டத்தட்ட உடனடி விளைவுகளையும் ஏற்படுத்தும்.

குழந்தை பருவ உணர்ச்சி புறக்கணிப்பு (CEN) என்பது பெரும்பாலான மக்கள் கையாளும் அதே சமயம் பலரும் அறிந்திருக்காத ஒரு பொதுவான மனநல பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிடப்படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சித் தேவைகளை (emotional needs) பூர்த்தி செய்யாத போது இது நிகழ்கிறது. இதன் விளைவாக பெரியவர்களகாக வளர்ந்த பின்னரும் கூட சுய சந்தேகம் (self-doubts) தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குழந்தை பருவ உணர்ச்சி புறக்கணிப்பு என்றால் என்ன?

ஒரு குழந்தையின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் குழந்தையின் உணர்ச்சித் தேவைகளுக்குப் போதுமான அளவு பதிலளிக்க தவறும் போது CEN ஏற்படுகிறது. உணர்ச்சிப்பூர்வமான புறக்கணிப்பு என்பது குழந்தையின் உணர்வுகளை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக இல்லாவிட்டாலும் கூட அது குழந்தையின் உணர்ச்சி தேவைகளைக் கவனிக்க தவறியதன் விளைவாக கூட இருக்கும்.

குழந்தை பருவ உணர்ச்சிப் புறக்கணிப்புக்கு ஒரு உதாரணம், பள்ளியில் இருக்கும் ஒரு ஃபிரெண்டை பற்றி தாம் வருத்தமாக இருப்பதாக பெற்றோரிடம் ஒரு குழந்தை கூறுகிறது என்று வைத்து கொள்வோம். ஆனால் பெற்றோர் அதைக் கேட்டு குழந்தை அந்த சிக்கலை சமாளிக்க உதவுவதற்கு பதிலாக, குழந்தை பருவத்தில் இதெல்லாம் சாதாரண ஒன்று என்று விளையாட்டாக அதை கடந்து செல்வார்கள். இதனால் காலப்போக்கில் குறிப்பிட்ட குழந்தை தனது உணர்ச்சித் தேவைகள் முக்கியமல்ல என்பதாக நினைத்து கொண்டு ஆதரவு தேடுவதை நிறுத்தி விடுகிறார்கள்.

குழந்தை பருவ உணர்ச்சி புறக்கணிப்பால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அறிய உதவும் சில அறிகுறிகள்:

* உங்கள் மீது தவறு கூட இல்லாத விஷயங்களுக்கும் கூட உங்களை நீங்களே குற்றம்சாட்டி கொண்டு உங்கள் மீது தவறு இருப்பதாக நம்புவது

* பிறரை நம்ப அச்சம் கொள்வது

நீங்கள் எப்போதும் உங்கள் உணர்ச்சி தேவைகளை கவனித்து கொள்ளாமல் இருப்பது

* உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் வாழ்க்கை இலக்குகளை அடையாளம் காண்பது உங்களுக்கு கடினமாக இருப்பது

* நீங்கள் அடிக்கடி வெறுமையாக அல்லது தனியாக இருப்பது போல உணர்வது, மேலும் நாம் மிகவும் குறைபாடுடையவர் என்று நீங்களே நம்புவது

மேற்காணும் அறிகுறிகள் உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே..

உங்களைப் புரிந்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை என்பது மன அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கிய படிகளில் ஒன்றாகும். எனவே நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொண்டு உங்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கவும்.

குணமாக செயல்படுங்கள் : உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியை நீங்கள் சரி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்தவுடன், அதிலிருந்து குணமாக தேவையான செயல்முறையை துவங்குங்கள்.

சந்திக்க முயற்சி : உங்களுக்கு போதுமான உணர்ச்சிபூர்வ ஆதரவு கிடைக்கவில்லை என்று நினைக்கும் போதெல்லாம், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உங்கள் சகாக்களை சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

நிபுணர் உதவி : உங்கள் மன ஆரோக்கியத்திற்காக மருத்துவரிடம் செல்வதில் தவறில்லை. உங்களால் கையாள முடியாத நேரத்தில் நீங்கள் ஒரு தொழில்முறை நிபுணரை அணுகி மருத்துவ உதவியை நாடலாம்.

Source: https://go.ly/F1ZGk

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்