குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகள்!

 

Parenting Tips | குழந்தைகளுக்கு விட்டமின் ஏ, விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன், இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், நட்ஸ், உலர் பழங்கள் போன்ற உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும்.

பச்சிளம் குழந்தைகளுக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடிய உணவுகள் மிக முக்கியமானதாகும். குறிப்பாக பருவ மாற்றங்களுக்கு ஏற்ப, குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிப்பது பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுகள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது அவசியமாகும்.

இதுமட்டுமல்லாமல் வளர்பருவ நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தேவைப்படுகின்றன. பொதுவாகவே ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அவை எளிதில் ஜீரணம் அடையக் கூடியவை.

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ, விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன், இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், நட்ஸ், உலர் பழங்கள் போன்ற உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் வாசனை மசாலா பொருட்களை சேர்த்து கொடுத்தால், அவர்களுக்கு பசியைத் தூண்டி, ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

விட்டமின் ஏ சத்து நிறைந்த சூப் :

தேவையான பொருட்கள்

கேரட் - 250 கிராம்

உருளைக்கிழங்கு - 250 கிராம்

பூண்டு பற்கள் - 10

தண்ணீர் - 1 ½ கப்

பாலக்கீரை - ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி பவுடர் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சின்ன, சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் பாலக் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும்.

2. இதனுடன் பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, காய்கறி மற்றும் கீரையை 5 முதல் 6 நிமிடங்களுக்கு குக்கரில் வேக வைக்கவும்.

3. இப்போது 10 நிமிடங்களுக்கு இந்த கலவையை ஆற வைக்கவும்.

4. இந்த கலவையை மிக்ஸியில் அடித்து சூப் போல எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. இதன் மீது கொஞ்சம் இஞ்சி பவுடர் தூவி வெதுவெதுப்பாக குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

கம்பு கிச்சடி:

தேவையான பொருட்கள்

கம்பு - ½ கப்

துவரம் பருப்பு - ½ கப்

காய்கறி கலவை - 1 கப் (விருப்பமான காய்கறிகள்)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. காய்கறிகளை கழுவி நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

2. துவரம்பருப்பை கழுவி 30 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

3. குக்கரில் கொஞ்சம் நெய் சேர்த்து, அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். அதற்கு அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது காய்கறி மற்றும் மஞ்சள் பவுடர் சேர்க்கவும்.

4. அதனுடன் கம்பு மற்றும் துவரம் பருப்பு கலவையை சேர்க்கவும்.

5. இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

6. 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவைத்து ஆறிய பின் பரிமாறவும்.

Source: https://go.ly/IwFxd

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்