செய்யும் செயலை நேசியுங்கள்.. சிறப்பாக முடியும் பாருங்கள்!

 எப்போதுமே நாம் செய்யும் செயலையும், நாம் செய்யத் திட்டமிடும் காரியத்தையும் முதலில் நாம் நேசிக்க வேண்டும்.

அப்படிச் செய்யும் செயல் எல்லாமே நிச்சயம் வெற்றியில்தான் முடியும். அதுதான் இதன் அழகே.

எப்படி ஒரு காதலிக்கும், மனைவிக்கும் நாம் ஆசையோடு முத்தமிட்டு ரசித்து மகிழ்கிறோமோ அதுபோலத்தான் நாம் செய்யும் செயலையும் காதலிக்க வேண்டும்.

வாஞ்சையுடன் அணுகுங்கள் வாஞ்சையுடன் அதை அணுக வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும்.. முடிவு பெறும். எந்த ஒரு செயலையும் செய்யும் போது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். நினைத்துப் பண்ணுங்கள் காலையில் எழுந்து காபி போடும் போது கூட இது என்னவருக்கானது என்று நினைத்து செய்யும் போது அந்த காபியின் சுவையே தனி தான். சமையல் செய்யும் போது கூட என் குடும்பத்திற்காக சமைக்கிறேன் என்று மனதில் நினைத்து சமைத்தால் அன்றைய தினம் உணவின் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

செயலை சிறப்பாக செய்வோம் எண்ணித் துணிக கருமம் என்பார்கள். செயலை செய்யத் தொடங்கும் முன் தான் இந்த செயலைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன் என்று மனதில் உறுதி கொள்ளுங்கள். எந்த செயலையும் முழுமனதோடு செய்தால் வெற்றி உங்கள் வசம் தான்.


ஒரு செயல் செய்தால் நாம் அதில் வெற்றிப் பெறுவோமா இல்லை தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று யோசிக்காமல் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள் வெற்றி உங்களுக்குத்தான். எதுவும் கடினம் இல்லை இவ்வுலகில் அதை நேசித்து செய்தால். எது செய்தாலும் லவ்வோட செய்யுங்க பிறகு பாருங்க எல்லா செயலிலும் வெற்றி உங்கள் பக்கம் தான்.

Source: https://go.ly/tY4vu

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்