மனநிறைவில் தான் மகிழ்ச்சி

 மகிழ்ச்சியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவாக வந்து நம்மை மகிழ்விக்காது.. நாம் சார்ந்திருக்கும் விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோமோ அதற்கேற்றார் போலத்தான் மகிழ்ச்சியும் நம்மை நாடி வரும்.. ஓடி வரும்.

ஏழுகடலைத் தாண்டி ஏழுமலையைத் தாண்டி ஒரு மனிதன் ஓடுவது அவனுடைய மகிழ்ச்சிக்காகத் தான். எத்தனை சொத்து சுகம் சேர்த்து வைத்தாலும் மகிழ்ச்சி இல்லையென்றால் அது நிறைவான வாழ்க்கையாகாது. நம் மனநிறைவில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. எந்தச் செயலையும் முழுமனதோடு செய்தால் நிச்சயம் மகிழ்ச்சி இருக்கும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். உள்ளம் குளிர்ந்து முகத்தில் ஏற்படும் சந்தோசம் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தும். நம் மனதுக்குப் பிடித்த செயலைச் செய்யும் போதோ அல்லது மனதுக்குப் பிடித்தவரிடம் பேசும்போதோ நம் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நம்முடைய மகிழ்ச்சிக்கு நாம் தான் காரணம். அதனால் உங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள். பிடித்த உடைகளை அணியுங்கள். மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்றால் முதலில் நம் மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழும் வாழ்க்கை ஒரு முறை தான். எனவே வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மனம் திறந்து அனுபவியுங்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன செயல்களையும் ரசியுங்கள். சந்தோசம் நிறைந்த வீட்டில் சிரிப்பிற்குப் பஞ்சம் இருக்காது.

Source: https://go.ly/rc8GA

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்