இயற்கை விரும்பியா நீங்கள்? நிறத்தின் அடிப்படையில் உங்களின் ஆளுமை வகை என்ன தெரியுமா?
நிறங்களால் உண்மையில் நமது உணர்வுகளையும், ஆளுமைகளையும் ஷேப் செய்ய முடியும் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
பல ஆண்டுகளாக மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கில் கலர் சைக்காலஜி (Color psychology) பயன்படுத்தப்பட்டு வருகிறது. கவர்ச்சிகரமான நிறங்களை பயன்படுத்துவது ஒரு பொருளின் காட்சித் திறனை 90%-க்கும் மேல் அதிகரிக்கிறது என்று அனுபவம் வாய்ந்த சந்தையாளர்கள் கூறுகின்றனர். பிராண்ட் நிறத்தின் காரணமாக ஒரு பொருளை பலர் வாங்க முனைகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கலர் சைக்காலஜி மனித ஆளுமைப் பண்புகளை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிறங்களால் உண்மையில் நமது உணர்வுகளையும், ஆளுமைகளையும் ஷேப் செய்ய முடியும் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒரு மனிதனின் உளவியலை அளவிட நிறம் ஒரு அற்புதமான கருவியாகும். சில நிறங்களை ஒருவர் உணரும் விதம் அந்த நபரை பற்றிய ஒரு பெரிய விஷயத்தை வெளிப்படுத்துகிறது. அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய கலர்களின் அடிப்படையில் மக்களின் ஆளுமை வகைகள் (personality type) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சிவப்பு : சிவப்பு நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். சிவப்பு நிறம் பெரும்பாலும் ஆற்றலுடன் தொடர்புடையது. இந்த நிறத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் நம்பிக்கை, ஆற்றல் மற்றும் பெரும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் எப்போதும் ஆழ்ந்த அறிவை பெறவே விரும்புவார்கள். சிவப்பு நிறம் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்த நிறம். பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது சிவப்பு நிற புடவை அணிய விரும்புவர். அம்மனுக்கு உரித்தான நிறம்.
வேகமான சிந்தனை கொண்டவர்கள், ரிஸ்க் எடுக்க கூடியவர்கள், நோக்கத்திற்காக செயல்படக்கூடியவர்கள், பெரும்பாலும் வலுவான விருப்பமுள்ளவர்கள் மற்றும் எப்போதும் போட்டித் தன்மை கொண்டவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். சுருக்கமாக சொன்னால் மற்ற கலர் பர்சனாலிட்டி டைப்களுடன் ஒப்பிடும் போது, சிவப்பு நிற பிரியர்கள் ஆற்றல் மற்றும் நேர்மறையின் அடிப்படையில் முதலாம் இடத்தில் உள்ளனர்.
நீலம் : நீல நிற ஆளுமை கொண்டவர்கள் இயல்பிலேயே ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும், ஒரு விஷயத்தை நன்கு ஆய்வு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அவசரப்படாமல் ஒரு காரியத்தைச் செய்ய தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்து கொள்கிறார்கள். நீல நிற ஆளுமை கொண்டவர்கள் விஷயங்களில் தெளிவின்மை அல்லது உண்மைகள் இல்லாதிருப்பதை விரும்பமாட்டார்கள். எப்போதும் உண்மையை விரும்புபவர்கள். சத்தியத்தை உரைக்க நினைப்பவர்கள். தர்மத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
பச்சை : இயற்கை விரும்பிகள். பச்சை நிற பர்சனாலிட்டி டைப்பை சேர்ந்தவர்கள்தான் மிகவும் அருமையானவர்கள். கூலான நபர்களாக இருப்பார்கள். எப்போதும் நிதானமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கிறார்கள். உறவுகளாக இருந்தாலும் சரி, அலுவலக சகாக்களாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சமூக கூட்டமாக இருந்தாலும் சரி பச்சை நிற பிரியர்கள் எப்போதும் சிறந்த நபர்களாகவே இருப்பார்கள்.
இவர்கள் இயற்க்கையோடு எப்போதும் தங்களை ஒன்றிணைத்து வைத்துக்கொள்ள எண்ணுவர். மரம் நடுவது , ஆறுகளில் குளிப்பது , அருவிகள் செல்வது என இயற்கையாக வாழ எண்ணுவர்.
மஞ்சள் : மங்களகரமான நிறம் என்பர். திருமணம் , திருவிழா என எதிலும் இந்த நிறத்திற்கு முதலிடம். மஞ்சள் நிறத்தை நேசிப்பவர்கள் மிகவும் நேசம் கொண்டவர்கள் மற்றும் அதிக கற்பனைத் திறன் கொண்டவர்கள். இந்த நபர்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கை மற்றும் உற்சாகம் அவர்களை எல்லோரிடமும் நெருக்கமான ஒருவராக ஆக்குகின்றன. இந்த வேகமான சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கற்பனைகள் அடக்கப்படுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் இயற்கையோடு ஒன்றி இருப்பார்கள்.
கருப்பு : கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் கௌரவம் மற்றும் அதிகாரத்தை சுவைக்க விரும்புகிறார்கள். கலை நாட்டம் மற்றும் சென்சிட்டிவ் உணர்வு கொண்டவர்கள். கருப்பு நிற ஆளுமை மக்கள் மிகவும் வலுவான விருப்பமுள்ளவர்கள். இவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வதோடு, தங்களை சுற்றியுள்ளவற்றையும் கட்டுப்படுத்த முனைகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் பலவீனங்களை பிறருக்கு வெளிகாட்ட மாட்டார்கள்.
வெள்ளை : வெள்ளை வேட்டி கட்ட நல்ல வெள்ளை உள்ளம் வேணும் என கூறுவார்கள். வெள்ளை நிறம் அமைதி மற்றும் சாந்தத்துடன் தொடர்புடையது. தெளிவு, புத்துணர்ச்சி, எளிமை மற்றும் பண்புகளில் ஒழுங்கமைப்பை வெள்ளை நிறம் வெளிப்படுத்துகிறது. வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அமைதியாகவும், சமநிலையாகவும், அச்சமற்றவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாக, சுதந்திரமானவர்களாக, வலுவான கருத்தைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் விவேகமாணவர்கள் மற்றும் புத்திசாலிகள்.
Source: https://go.ly/bHrsX
கருத்துகள்
கருத்துரையிடுக