முயற்சிகள் புதுசா இருக்கட்டும்.. புதுமைப்பித்தனாக மாறுங்க!
எல்லோரும்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்களிலிருந்து உங்களை மட்டும் தனித்துக் காட்டுவது எது.. அப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு வந்து விட்டாலே போதும்.. அந்த இடம்தான் நீங்கள் வெல்லப் போகும் முதல் அறிகுறி ஆகும்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதுசாக இருக்க வேண்டும். புதுமைப்பித்தனாக நீங்கள் இருக்க வேண்டும். அதுதான் உங்களை தனித்துவம் மிக்கவராக மாற்றும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். எந்த ஒரு செயலையும் எல்லோரையும் போல ஒரே மாதிரி செய்யாமல் புதிதாக வேற மாதிரி செய்யுங்கள். உதாரணமாக பழைய துணிகளைக் கூட புது டிசைனாக மாற்றி அணிந்துக் கொள்ளலாம். இதற்குப் பெரிய செலவு ஒன்றும் ஆகாது. காய்கறிகளை வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தாமல் காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். அதுபோல உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலைகளில் கூட புதுமைகளைப் புகுத்தலாம். தினமும் காலையில் புதுசா எதாவது யோசிங்க. காலையில் வாங்கும் செய்தித்தாள் முதல் இரவு படுக்கும் வரை நீங்கள் செய்யும் செலவுகளைச் சிக்கனப்படுத்துங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. ஆனால் வித்தியாசமான தீர்வை யோசிப்பவன் தான் வாழ்வில் வெற்றி அடைகிறேன். அதனால் உங்கள் செயல்களில் புதுமைகளைப் புகுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள். கொஞ்சம் மாத்தி யோசிங்க வெற்றி உங்கள் வசம் தான்.
Source: https://go.ly/AHKxT
கருத்துகள்
கருத்துரையிடுக