புத்தம் புது காலை.. நாளெல்லாம் வசந்தமே!

 புத்தம் புது காலை.. இந்தப் பாடல் உருவாகி வருஷங்கள் எத்தனை கடந்தாலும் இந்த நிமிடத்தில் இதைக் கேட்டாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. அந்த அளவுக்கு அதில் ஒரு பிரஷ்னஸ் இருந்து கொண்டே இருக்கிறது.

இதுதான் நமது மனதிலும் எப்போதும் இருக்க வேண்டிய உணர்வு. ஒவ்வொரு நாளும் புது நாள்.. ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பு.. ஒவ்வொரு நாளும் நமக்கு வசந்தமே.. இப்படி எண்ணியபடி ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.. எல்லாமே வேற லெவலில் இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் நாம் மிகவும் புத்துணர்வோடு இருப்போம். இன்றைய நாள் என்னுடைய நாளாக மாற்றுவேன் என்று நினைத்து உங்கள் செயலைத் தொடங்குங்கள். புத்தம் புதிய எண்ணங்கள் நம் மனதில் பிறக்கும். எந்த செயலையும் நான் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கும். மனதில் தன்னம்பிக்கையோடு செயலாற்றுங்கள். உங்கள் செயல்களை முன்பே திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயலைச் செய்தால் நிச்சயம் வெற்றி தான். புத்தம் புதிய காலையில் புதிய எண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள். நேற்று நடந்த பிரச்சினைகளுக்குக் கூட இன்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் அதற்கான தீர்வு புலப்படும்.

நல்ல நாள் கெட்ட நாள் என்று எதுவுமே கிடையாது. நம் மனதில் நான் இன்று சிறப்பாக செயல்படுவேன் என் இலக்குகளை அடைய பாடுபடுவேன் என்ற எண்ணத்தோடு நாளைத் தொடங்குங்கள். நிச்சயம் எல்லா நாளும் இனிய நாள் தான்.

வாழ்க்கையில் பழையது என்று எதுவுமே கிடையாது. அதுதான் உண்மை. ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறோம்.. இது பழைய விஷயம்தான். ஆனால் தினசரி புதிது புதிதாக அதைச் செய்கிறோமா இல்லையா. அதுபோலத்தான் எல்லா செயல்களும் புதுசுதான். நாம் செய்யும் விதத்தில் ரசிக்கும் விதத்தில்தான் அது இருக்கிறது. புத்தம் புது காலை அழகான வேளை.. இவ்வேளையில் உங்கள் செயல்களை வெற்றிகரமாக செய்து விடுங்கள்.

Source: https://go.ly/ZW23n

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்