நல்லா யோசிச்சு சொல்லுங்க... எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா?

99 மார்க் எடுக்கும் ஒருவர் 96 மார்க் எடுத்தாலும் அவர்தான் முதல்வர்.. சந்தேகமே இல்லை. ஆனால் 30 மார்க் எடுக்கும் ஒருவர் 33 மார்க் எடுத்தாலும் பெயில்தான்.. சந்தேகமே இல்லை.. ஆனால் முன்னவரை விட பின்னவர்தான் தனது படிப்பில் முன்னேறுகிறார்.. அதுதான் உண்மை.. அதைப் பலர் மறந்து விடுகிறோம்.

முன்னவர் தனது கவனத்தில் சறுக்கி வருகிறார்.. ஆனால் பின்னவரோ படிப்பில் முன்னேற ஆரம்பித்துள்ளார். இந்த முன்னேற்றத்தை ஒவ்வொரு தேர்விலும் அவர் மறக்காமல் காட்டத் தொடங்கினால்.. ஒரு நாள் அவரும் முதல்வர் ஆவார்.. இவ்வளவுதாங்க வாழ்க்கை.. "பிராகரஸ்".. அதுதான் நமக்கு முக்கியம்.. வெற்றியெல்லாம் பின்னாடிதான்.

முயற்சி மட்டுமே நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லும். முதல் முறை 34 மார்க் வாங்குபவன் அடுத்த தேர்வில் 45 மார்க் வாங்கினால் அவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று பொருள். அவனுடைய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அடி மேல் அடி வைத்தால் தான் அம்மியும் நகரும் என்பார்கள். அதுபோல சிறிது முயற்சி எடுத்திருப்பவரை உன்னால் முடியும் நீ நினைத்தால் உன்னால் இதை விட இன்னும் அதிகமாக பெற முடியும் என்று அவனுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்.

எல்லோரும் பிறரிடம் எதிர்பார்ப்பது சின்ன சின்ன பாராட்டுகள் தான். அந்த பாராட்டுகளே ஒருவனை மென்மேலும் உயர்த்தும். ஒரு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் அடுத்த தேர்வில் எடுத்த தேர்வின் மதிப்பெண்ணையும் வைத்து சரிபாருங்கள். முதல் தேர்வில் எடுத்த மார்க்கை விட இரண்டாவது தேர்வில் இரண்டு மார்க் அதிகமாக எடுத்தால் கூட உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போடுங்கள். உங்கள் வெற்றியைக் கொண்டாடுங்கள்.

பாஸா பெயிலா என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்விலும் நம்முடைய மார்க் முந்தைய தேர்வை விட உயர வேண்டும். அதற்காக நீங்கள் முயற்சி செய்தால் போதும். அவ்வாறு செய்தால் நீங்களும் சிறந்த முதல்வர் தான். படிப்படியாக முன்னேறுகிறோமா என்பதை மட்டும் உன்னிப்பாக கவனியுங்கள். அதுவே உங்களைச் சிறந்த முதல்வராக்கும். முயற்சி தன்னம்பிக்கை இவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு தேர்வில் பாஸா பெயிலா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பிராகரஸை உயர்த்துங்கள். வெற்றி உங்கள் வசம் தான்.

Source: https://go.ly/b30xV

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்