குழந்தைகளிடையே அதிகரிக்கும் நீரிழிவு நோய் : பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன..?

 

தொற்றுநோய்களின் போது, 13 முதல் 15 வயது வரையிலான நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இன்றை வாழ்க்கைமுறையில் நோய் என்பது வயது வரம்பின்றி யாரையும் தாக்குகிறது. இது மக்களை மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நோக்கி நகர்த்துகிறது.

அந்த வகையில் ஆய்வின்படி குழந்தைகளை நீரிழிவு நோய் அதிகமாக தாக்குகிறது என்பது கவலைக்குறிய விஷயமாக உள்ளது. பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் தாக்குகிறது என்பது பெற்றோர்களுக்கான எச்சரிக்கையாகவும் இந்த ஆய்வு உள்ளது. இந்த ஆய்வானது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நடத்தியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் அஸ்மிதா மகாஜன் மற்றும் டாக்டர் குருதத் பட் தலைமையிலான இந்த ஆய்வில், கோவிட் நோயிலிருந்து மீண்டு வரும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்:

அதிக தாகம் மற்றும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகியவை குழந்தைகளிடையே தென்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளாக திடீர் எடை இழப்பும் இருக்கும்.

தொற்றுநோய்களின் போது, 13 முதல் 15 வயது வரையிலான நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா ஊரடங்கின்போது குழந்தைகளின் இயக்கம் அதாவது விளையாட்டு , உடல் ஆற்றல் தடைபட்டுள்ளது. அதோடு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்ததால் முற்றிலும் குழந்தைகளுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போயுள்ளது. இது குழந்தைகளின் கண்களையும் பாதித்துள்ளது. இதனால் சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

குழந்தைகளின் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க அல்லது தவிர்க்க உதவும் வழிகள் :

1.உடல் செயல்பாடு: குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 60 நிமிடங்களாவது வெளியே சென்று விளையாட வேண்டும்.

2.எடையைக் குறைத்தல் : டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க எடை இழப்பு மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

3. சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும் : அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட சோடா மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனத்திற்கு... தூக்கமின்மையை போக்க எளிமையான 10 டிப்ஸ்கள்!

4. திரை நேரம் வரம்பு : கணினி, மொபைல் ஃபோன்கள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் நேர வரம்பை அமைக்க வேண்டும்.

5. சரிவிகித உணவில் கவனம் செலுத்துங்கள்: நீரிழிவு அபாயத்தைக் குறைக்க சமச்சீர் உணவு மற்றும் போதுமான தண்ணீர் உட்கொள்ளல் அவசியம்.

6. குளுக்கோஸ் கண்காணிப்பு : பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

Source: https://go.ly/1xJRp

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்