குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி தெளிவாக சொல்லி கொடுப்பது எப்படி?

 

good touch, bad touch : குழந்தைகளை பாராட்டும் நோக்கத்தின் கீழ் அவர்களின் முதுகில் லேசாக தட்டிக்கொடுப்பது குட் டச் தான்.

'குட் டச், பேட்' டச் பற்றி பேசும் அளவிற்கு நம் குழந்தைகள் வளரவில்லை, இது பேச தேவைப்படாத ஒரு 'டாப்பிக்' என்று நினைக்கும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவர் என்றால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்ளவும்.

தொடுதல்களில் இருக்கும் வேறுபாட்டை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது, அது பெற்றோர்களின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகி விட்டது. ஏனெனில் எது நல்ல தொடுதல்? எது தவறான தொடுதல்? என்பதை அறிந்து கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழந்தைகள் சிறியவர்கள் ஆவார்கள். ஆகையால் இந்த பொறுப்பு பெரியவர்களிடமே வந்து சேர்கிறது.

முதுகில் தட்டுவது:

குழந்தைகளை பாராட்டும் நோக்கத்தின் கீழ் அவர்களின் முதுகில் லேசாக தட்டிக்கொடுப்பது குட் டச் தான். ஆனால் அதுவே குழந்தைகளுக்கு வலியை கொடுக்குமானால் அது பேட் டச் ஆகும். இந்த வேறுபாட்டை பற்றி குழ்நதைகளுக்கு தெளிவாக சொல்வது அவசியம்,

நெற்றியில் முத்தமிடுவது:

குழந்தைகளின் நெற்றியில் கொடுக்கும் அன்பான ஒரு சிறிய முத்தம்எப்போதுமே ஒரு குட் டச் தான். ஆனால் அதை கொடுப்பது ஒரு அந்நியராகவோ அல்லது தவறான நோக்கம் கொண்ட ஒரு நபராகவோ இருந்தால் அது ஒரு மோசமான நடத்தை; பேட் டச் ஆகும்.

Youtube Video

மிகவும் 'கம்ஃபோர்ட்டபிள் ஆக 'ஹக்' கொடுப்பது:

யாருக்கு தான் குட்டி குட்டி குழந்தைகளுக்கு க்யூட் அன்ட் ஸ்வீட் ஆக ஒரு ஹக் கொடுக்க பிடிக்காது. அப்படியாக சங்கடப்படுத்தாமல், மிகவும் மென்மையான முறையில் குழந்தைகளை கட்டிப்பிடித்தால், அது கண்டிப்பாக ஒரு நல்ல தொடுதல் தான்.

கை குலுக்குவது:

வயது வித்தியாசம் பார்க்காமல் முதியவர், இளைஞர் என யாராக இருந்தாலும் குழந்தைகளுடன் நிகழ்த்தும் ஒரு உறுதியான கைகுலுக்கல் நிச்சயம் ஒரு நல்ல தொடுதலே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மற்ற வகையான பாராட்டுகளை விட / விசாரிப்புகளை விட இதுவே மிகவும் சிறந்தது.

பிட்டங்களில் தட்டுவது:

நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் கூட குழந்தைகளின் பிட்டங்களைத் தட்டுவது, தொடுவது - மிகவும் மோசமான ஒரு பேட் டச் ஆகும். யார் இப்படி நடந்து கொண்டாலும் அதைப் பற்றி பெற்றோரிடம் புகார் அளிப்பது குறித்தும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.

உதடுகளில் முத்தமிடுவது:

மிகவும் நெருங்கிய சொந்தம் என்றாலும் கூட, அவ்வளவு ஏன்? இரத்த சொந்தமாகவே இருந்தாலும் கூட குழந்தைகளின் உதட்டில் முத்தமிடுவது - நல்லதல்ல. யாரேனும் உதடுகளில் முத்தமிட முயற்சித்தால் அந்த நபரை விட்டு தூரம் வர வேண்டும், அதை பற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று பிள்ளைகளுக்கு கற்பிப்பது நல்லது.

சங்கடமான, இறுக்கமான 'ஹக்' கொடுப்பது:

கட்டிப்பிடிக்கும்போது யாராவது குழந்தைகளை அடக்க முயற்சித்தால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியை அழுத்த முயற்சித்தால், ஒட்டுமொத்தமாக ஒரு 'ஹக்' சிறிதளவு சங்கடமாக இருந்தாலும் கூட அது பேட் டச் தான்.

அந்தரங்க பகுதிகளைத் தொடுவது:

அந்தரங்க உறுப்புகளையோ, தொடைகளையோ யாரேனும் தொட முயன்றால், அதை பள்ளி ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்கும்படி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கவும்.

 கை குலுக்கல்:

கைகுலுக்கல் என்கிற பெயரின் வழியாக கைகளை பிடிக்க முயன்றால், அது ஒரு பேட் டச் ஆகும். உடனடியாக கைகளை பறித்துக்கொள்ளும் படி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவும்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டும். குழந்தைகள் அரிதாகவே பொய் சொல்கிறார்கள், எனவே அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேளுங்கள்; குழந்தையின் புகார்கள் குடும்ப உறுப்பினருக்கு எதிராக இருந்தாலும் கூட அதை அலட்சியப்படுத்தாதீர்கள்

நம்பிக்கையான ஆட்களை அடையாளம் காண உதவுங்கள்!

பிள்ளைகளுக்கு 'பேட் டச், குட் டச்' பற்றி கற்பித்தால் மட்டும் போதாது. நம்பிக்கைக்குரிய தாத்தா, பாட்டி, ஆசிரியர், அத்தைகள் மற்றும் மாமாக்கள் போன்ற ஆட்களை அடையாளம் காணவும் குழந்தைக்கு உதவுங்கள்.

Source: https://go.ly/foJsb

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்